Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை அறிவிப்பு – ஓபிஎஸ்.!!

அதிமுக வேட்பாளர்கள் நாளை காலை  அறிவிக்கப்படுவார்கள் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 3 மணி வரை விருப்பமனு கொடுக்கப்பட்து. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.   இந்நிலையில்  நேற்று மாலை சென்னை ராயப்பேட்டையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : “அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை”… முதல்வர் ஈபிஎஸ் .!!

அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவில்லை, பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல்  நடைபெறுகிறது . இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நேற்று (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் இன்று (23-ஆம் தேதி) மாலை 3 மணிவரை விருப்பமனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்தது. அதன்படி  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்காக  90 பேர் விருப்பமனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : விருப்பமனு விநியோகம் நிறைவு… யாரை தேர்வு செய்யப்போகிறது அதிமுக?..!!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் நிறைவு பெற்றுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல்  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக நேற்று காலை 10 மணி முதல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு அளித்து வந்தது. நேற்று வரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். அதில் அதிகபட்சமாக நாங்குநேரி தொகுதியில் திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி அன்பழகன், கே ஆர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் வேட்பாளர் யார்?…. இன்று அதிமுக நேர்காணல்..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் விருப்பமனு பெற்றவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் புதுவையில் காமராஜர் தொகுதியிலும்  வருகின்ற அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும்,  வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.   இதையடுத்து அதிமுக நேற்று காலை 10 மணி முதல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட விரும்புவர்களுக்கு விருப்பமனு அளித்து வருகின்றது. இதுவரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதிமுக சார்பில் விருப்பமனு”…. 2 தொகுதிக்கு இத்தனை பேரா?

அதிமுக சார்பில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் போட்டியிட இதுவரை மொத்தம் 27 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அதிமுக மற்றும் திமுக இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு ரூ 25,000 பெற்றுக்கொண்டு விருப்பமனு அளித்து வருகின்றன. இதில் அதிமுக சார்பில் ராயப்பேட்டை  தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன், ஆர்.லட்சுமணன் விருப்ப மனு.!!

அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்.பி மனோஜ் பாண்டியன் மற்றும்  முன்னாள் எம்.பி ஆர்.லட்சுமணன் விருப்ப மனு பெற்றுள்ளனர்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.  இதையடுத்து அதிமுக தலைமை  இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று (22ஆம் தேதி) காலை 10 மணி முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : அதிமுக சார்பில் விருப்ப மனு வினியோகம் தொடக்கம்.!!  

இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம்  அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது.   இதையடுத்து அதிமுக நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர் யார்?… நாளை மறுநாள்  3.30 மணிக்கு நேர்காணல்..!!

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு  நாளை மறுநாள்  3.30 மணிக்கு நேர்காணல் நடைபெறும் என்று அதிமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில்  அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், […]

Categories
மாநில செய்திகள்

“ரூ.25 000 செலுத்தி நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம்”…. அதிமுக தலைமை அறிவிப்பு..!!

இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று அதிமுக அறிவித்துள்ளது.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது . அதன்படி அக்டோபர் 21-ல் இடைத்தேர்ல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  அக்டோபர் 24_ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக அதிமுக கட்சிகள் பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் பேச்சை கேட்டு விஜய் இப்படி பேசினார்- அமைச்சர் கடம்பூர் ராஜ் கருத்து…!!

நடிகர் விஜய் யார் பேச்சை கேட்டுக் கொண்டு இப்படி பேசுகிறார் என தெரியவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஜய் பேச்சு : மக்கள் நலனா ? வியாபார யுக்தியா ? புதிய சர்சையில் பிகில்…!!

நடிகர் விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழா பேச்சு மக்கள் நாளான என்று கேள்வி எழுந்த நிலையில்  வியாபார யுக்தியா என்ற சர்சையும் எழுந்துள்ளது. தமிழக அரசியலில் இரு துருவமாக , ஆளுமைமிக்க தலைவர்களாக இருந்து வந்த கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக அரசியல் குறித்த கருத்துக்களை பல்வேறு நடிகர்கள் சமீப காலமாக முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது.அதே போல […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”கல்லா” கட்டிய ”பிகில்”…. கலர் ஜெராக்ஸ்…. டிக்கெட் மோசடி…. ரசிகர்கள் போட்ட ஹாஷ்டாக் ட்ரெண்டிங் ….!!

விஜயின் பிகில் பட இசை வெளியீட்டு விழா_வில் போலி டிக்கெட் மோசடி நடந்துள்ளதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம்  பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார்.மேலும், கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் பாலாஜி, யோகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஜய் சொன்னா கேட்போம்…. #JusticeForSubaShree …. இந்தியளவில் ட்ரெண்டிங்…!!

பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் #JusticeForSubaShree என்ற ஹாஷ்டாக் பதிவிட்டது இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது.இதில் நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணியிருக்காங்க என்று அதிமுகவை நேரடியாக சாடினார். பின்னர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கதை இல்ல, படம் ஓடாது….. அதுக்கு தான் இப்படி பேசுறாரு விஜய்….. மீண்டும் சீண்டும் அதிமுக..!!

கதையே இல்லாத படத்தை ஓட்ட வேண்டுமென்று நடிகர் விஜய் இப்படி பேசியுள்ளார் என்று அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் […]

Categories
மாநில செய்திகள்

நாங்க எப்படி… ”அவுங்கதான் பதில் சொல்லணும்” பம்மிய சுகாதாரத்துறை அமைச்சர்….!!

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை தான் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னையை சேர்ந்த மருத்துவர் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேனி பல்கலைக்கழக டீனுக்கு வந்த EMAIL மூலமாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.இது குறித்து மாணவர் உதித்சூர்யா 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறை உதித் சூர்யாவை […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

#BigilAudioLaunch 16,00,000 ட்வீட்…. ”இந்தியளவில் ட்ரெண்ட்” தெறிக்கவிட்ட ரசிகர்கள்…!!

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த ஹாஷ்டாக் 16 லட்சத்துக்கும் அதிகமான ட்வீட் பதிவாகி ட்ரெண்டிங்கில் இருந்தது. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம்  பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் , இந்த படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பழிக்கு பழி…. வச்சு செஞ்ச விஜய்.. ஒரே நைட்டில் சோலி முடிஞ்ச அதிமுக- பாஜக…!!

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் தீபாளிக்கு வெளியாகும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.அதில் அவர் பேசிய பேச்சு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் கவர்ந்தது. ஆளும் அதிமுக , பாஜகவை கடுமையாக சாடி இருந்தார்.குறிப்பாக விஜய் அட்லி கூட்டணியில் முன்னதாக வெளிவந்த மெர்சல் படத்தில் GST தொடர்பான வசனங்கள் இடம்பெற்றதாக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதை தொடர்ந்து […]

Categories
அரசியல் சினிமா மாநில செய்திகள்

மெர்சலான தளபதி…”அரசியல்ல புகுந்து விளையாடுங்க”…. கதிகலங்கும் அதிமுக, பாஜக…!!

பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியதில் ஆளும் மத்திய மாநில அரசுக்கள் கலக்கத்தில் உள்ளன. தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியுடன் நடிகர் விஜய் 3ஆவது முறையாக இணைந்த படம்  பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு  பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுதியுள்ளார்.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார்.மேலும் , இந்த படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், டேனியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வியூகம் மாறுகிறது….. ரஜினி விளக்க வேண்டும்…. ஸ்டாலின்- ரஜினி மீது பாய்ந்த ஜெயக்குமார்…!!

திமுகவின் வியூகம் மாறிக்கொண்டிருப்பதை ஸ்டாலின் – ஆளுநர் சந்திப்பு காட்டுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது , நாட்டுக்கு பொது மொழி அவசியம் தேவை , இந்தியாவில் அதிக மக்கள் பேசும் இந்தியால் தான் மக்களை ஒருங்கிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்து இந்தி திணிப்புக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்டு தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜக ஆளும் கர்நாடக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”மின்சாரம் தாக்கி உயிரிழப்பு” 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு…!!

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டுபேரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு அடுத்தடுத்து இரண்டு உயிரிழப்பு நேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் முகலிவாக்கத்தை சேர்ந்த சிறுவன் தீனா மற்றும் சிட்லபாக்கம் சேதுராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மின்சாரவாரியத்தின் அலட்சிய போக்கு என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த  2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும்  முகலிவாக்கத்தை […]

Categories
மாநில செய்திகள்

ஊருக்கு போறிங்களா…”5 இடங்களில் பேருந்து நிலையம்” தெரிஞ்சுக்கோங்க…!!

தீபாவளி முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். அதில் ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. காஞ்சிபுரம்,  […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு முன்பதிவு அக்.23_ஆம் தேதி தொடக்கம்…!!

தீபாவளி அரசு பேருந்து சிறப்பு முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது , பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் , பேருந்து நிலையங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

”ஓய்வூதியம் வாங்கியாச்சு” துள்ளி குதிக்கும் போக்குவரத்து ஊழியர்கள்…!!

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பணப் பயன்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட காவலர்கள் , தீயணைப்பு துறையினர்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்தார் திறந்து வைத்த தமிழக முதல்வர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6283 பணியாளர்களுக்கு 1093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பலன்களை வழங்கும் அடையாளமாக 9  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories
மாநில செய்திகள்

12 நுகர்பொருள் சேமிப்புக் கிடங்கை முதல்வர் திறந்து வைத்தார்…!!

பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட 12 நுகர்பொருள் சேமிப்புக் கிடங்குகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக பல்வேறு மாவட்டங்களுக்கு கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தில 2.65 கோடி இல் கட்டப்பட்ட தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்பு  கிடங்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ”பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதியம்” முதல்வர் வழங்கினார்….!!

6283 அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதின் ஒரு பகுதியாக 9 பேருக்கான காசோலையை தமிழக முதல்வர் வழங்கினார் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் போதெல்லாம் பிரதானமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம். எப்போது அரசு வழங்கும் என்று ஏங்கி , காத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வர் ஓய்வூதியம் வழங்கினார்.   தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. இனி 600 மார்க் கிடையாது… 500 மார்க் தான்…!!

+1 மற்றும் +2 மாணவர்களுக்கு 600 மதிப்பெண்ணுக்கு நடந்து வந்த தேர்வு இனி 500 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுமென்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது.குறிப்பாக 10 மற்றும் 12  வகுப்புக்களுக்கான ரேங்கிங் முறையை நீக்கியது மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கியது. அதை தொடர்ந்து 11 மற்றும் 12_ஆம் வகுப்பு_க்கு 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது தொடங்கி இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாட தேர்வு ஒரு பாடமாக மாற்றப்பட்டது […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் வடகிழக்கு பருவ மழை…. முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை கூட்டம்…!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக நாகையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைத்தறித் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பருவமழையை […]

Categories
அரசியல்

ரஜினி கருத்தும் தமிழக மக்களின் கருத்தும் ஒன்னு தான்…. கடம்பூர் ராஜு பேட்டி…!!

ஹிந்தி திணிப்பை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தி மொழி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தும் இந்தியை திணிக்க கூடாது என்பதுதான் என்று குறிப்பிட்டார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

5 , 8_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு ”தேர்வு பயம் தான் அதிகமாகும்” கமல் எச்சரிக்கை…!!

5_ஆம் வகுப்பு மற்றும் 8_ஆம் வகுப்புக்கு கொண்டுவந்துள்ள பொது தேர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக அரசு 10 ,11 , 12 ஆகிய வகுப்புக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் புதிய சட்ட திட்டத்தால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்ற முறையை இந்த ஆண்டு முதல் அமுல்படுத்த இருக்கின்றது. இதற்க்கு அரசியல் கட்சிகள் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மின் பெட்டிகள் மீது சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை…. அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை…!!

சென்னை சிட்லபாக்கம் பக்கத்தில் நடந்த 2 மின் விபத்துகளுக்கு மின்சார வாரியம் பொறுப்பல்ல என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சிட்லபாக்கம் சேது ராஜ் மரணத்திற்கு சேதமடைந்த மின்கம்பம் தான் காரணம் என்று கூறுவதை மறுத்தார். சேது ராஜ் இறப்பதற்கு முன்பாக அவ்வழியாக சென்ற காங்கிரீட் லாரி மின்கம்பத்தை சேதப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டு அந்த மின்கம்பம் நல்ல நிலையில் இருந்ததற்கு […]

Categories
மாநில செய்திகள்

குட்கா விற்பனை ஜோர்….காவல்துறை இருக்கிறதா?… துணைப் போகிறதா?…. ஸ்டாலின் ட்வீட்….!!

குட்கா விற்பனை ஜோராக நடக்கின்றது, காவல்துறை இருக்கிறதா? அல்ல துணைப் போகிறாரா? என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தீங்கும் விளைவிக்கும் புகையிலை, குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பல்வேறு கடைகளில் புகையிலை பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. இதை தடுக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக ஏற்கனவே கடுமையாக விமர்சனம் செய்தது.மேலும் குட்கா விவகாரத்தில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் DGP ராஜேந்திரன் உட்பட பலர் மீது திமுக குற்றம் சாட்டியது. இந்நிலையில் திமுக தலைவர் […]

Categories
அரசியல்

”மது , சாராயம் எல்லாம் புனித நீரா ? சீமான் கேள்வி…!!

குட்கா மட்டும் தான் போதையா மது , சாராயம் எல்லாம் புனித நீரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக நீதிப் போராளி இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று சென்னை, கிண்டியில் உள்ள அவரது நினைவிடத் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் […]

Categories
மாநில செய்திகள்

வாட்ஸ் அப் வச்சு இருக்கோம் ”தரமற்ற மின்கம்பம் இல்லை” அமைச்சர் விளக்கம் …!!

தரமற்ற மின்கம்பங்கள் இல்லை , மின்கம்பம் தொடர்பான பிரச்சனையை சரி செய்ய வாட்ஸ் அப் குரூப் வைத்துள்ளோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மையில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இது மின்சாரத்துறையின் கவனக்குறைவு என்று பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முகலிவாக்கத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளம் தோன்றியதால் தெரியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை சிட்லபாக்கம் லாரி மோதியதில் மின்கம்பம் சேதம் அடைந்தது […]

Categories
மாநில செய்திகள்

தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள்… தமிழக முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் மரியாதை..!!

தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.  தமிழகத்தில் இன்று தந்தை பெரியாரின் 141 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருக்க கூடிய பல்வேறு முக்கிய இடங்களில் தமிழக அரசு சார்பில்  பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாள்”… முதல்வர் பழனிசாமி இதயப்பூர்வமான வாழ்த்து..!!

இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு  இதயப்பூர்வமான வாழ்த்துக்களை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.   பிரதமர் நரேந்திர மோடி தனது  69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது  பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு எங்களது இதயப்பூர்வமான […]

Categories
மாநில செய்திகள்

“நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன”…. பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து..!!

 நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று துணை முதல்வர்  பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி தனது  69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது  பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்,  அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உள்ளாட்சி தேர்தல் அட்டவணை கொடுத்தாச்சு” அமைச்சர் உறுதி ….!!

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்துவிட்டதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். தமிழகத்தில் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது.எப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமென்ற கேள்வியும் எழுந்தது. மேலும் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்ற வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆஜரான தேர்தல் ஆணையம் தரப்பில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் வரையறை பணிகள் நடைபெற்றதால் தேர்தல் கால தாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா”… இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை..!!

அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்  மரியாதை செலுத்தினர். சென்னையில் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகளும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் அதிமுக கட்சிக் கொடிகள் மற்றும் பேனர், கட் அவுட்  எதுவும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிமுக பேனர் விழுந்து பெண் மரணம்…. கொந்தளித்த மக்கள் போலீசில் புகார்…!!

சென்னையில் அரசியல் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் பெண் மீது சாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பல்லாவரம், கல்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுபஸ்ரீ என்ற கல்லூரி மாணவி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையின் தடுப்புகள் அருகில் இருக்கக்கூடிய மண்டபத்தில் அதிமுக பிரமுகரின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பேனர்கள் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது இருசக்கர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இத வச்சுக்கோங்க”ஸ்டாலினுக்கு 3 பெயர்… கிண்டல் செய்த அமைச்சர்…!!

தமிழில் பெயர் வையுங்கள் என்று சொல்லும் முக.ஸ்டாலின் முதலில் தனது பெயரை தமிழில் வைக்க வேண்டுமென்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை காசிமேடு துறைமுகத்தில் அமைய உள்ள சிறிய படகுகளில் தளம் மற்றும் மீன் விற்பனை கூடத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தமிழைப் பற்றிப் பேசும் திமுக தலைவரின் பெயர் தமிழில் இல்லை என விமர்சித்தார். தமிழுக்கு பேராபத்து திமுக தலைவரின் குடும்பத்தார் தான் என்று அவர் குற்றம் சாட்டினார். […]

Categories
மாநில செய்திகள்

3 நாட்கள் கெடு ”ரூ 87,50,00,000 வேணும்” எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ்…!!

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி நிலத்திற்கான நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பிள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரிக்கு நிலத்திற்கான நிலுவைத் தொகையை வரும் 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று மாநில வருவாய் நிர்வாகம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தமிழக அரசு 1992_ஆம் ஆண்டு ஹிண்டியில்  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கட்ட 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்தது.இந்த நிலத்தை கிரயம் […]

Categories
அரசியல்

“இஸ்ரேல் போகப்போறேன்” காமெடி பன்றாரு EPS… ஸ்டாலின் கிண்டல் …!!

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்த காவிரி நீர் இன்னும் பல இடங்களில் கடைமடைக்கு போய் சேரவில்லை என்றும் கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலப்பது போல் இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் […]

Categories
மாநில செய்திகள்

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டார் ஸ்டாலின்?…. கேள்வி கேட்ட சீமான்..!!

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார் ஸ்டாலின்? என்று சீமான் கேள்வி கேட்டுள்ளார்.   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.  13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இதையடுத்து  முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று எதிர்க்கட்சித் […]

Categories
மாநில செய்திகள்

“வெள்ளை மனதுடன் இருந்தால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுங்கள்” டிடிவி தினகரன் பதிலடி.!!

வெள்ளை மனதுடன் இருந்தால் முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.  13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று […]

Categories
மாநில செய்திகள்

“வெள்ளை அறிக்கையுடன் ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் கொடுப்போம்”… ராஜேந்திர பாலாஜி கிண்டல்..!!

வெள்ளை அறிக்கை மட்டுமின்றி வெள்ளரிக்காய் கூட ஸ்டாலினுக்கு தருவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.  13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS, OPS அறிக்கை.. ”சோலி முடிந்தது திமுக” … அதிமுக அதிரடி …..!!

அண்ணா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக OPS , EPS விடுத்துள்ள அறிக்கையில் திமுக ஆடி போயுள்ளது. செப்டம்பர் 15_ஆம் தேதி அறிஞ்சர் அண்ணாவின் பிறந்தநாள் நாள் விழா கொண்டாடப்பட இருக்கின்றது. அண்ணாவின் பிறந்த நாளை மிக சிறப்பாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.15ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க 1…… நாங்க 5….”திமுகவை ஊதி தள்ளும் அதிமுக”…. கெத்து காட்டும் EPS …!!

பேரறிஞ்சர் அண்ணா_வின் பிறந்த நாளின் அதிமுகவின் பொதுக்கூட்டத்தால் திமுக முணுமுணுத்து வருகின்றது. மத்திய அரசு ஜம்மு_க்கு வழங்கி இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்து புதிய சட்டம் சோதாவை நிறைவேற்றியது. இதற்க்கு பாஜகவின் எதிர் நிலைப்பாடு வகித்து தேர்தலை சந்தித்த பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும் திமுக , காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியளவில் பெரிய எதிர் கட்சி மற்றும் பாஜகவிற்கு அடுத்தபடியாக உள்ள தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரஸை விட திமுக கடுமையாக எதிர்த்து. குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கெல்லாம் வேற லெவல்.. ”ஆக்ஷனில் இறங்கிய EPS” கதி கலங்கும் ஸ்டாலின்….!!

பேரறிஞ்சர் அண்ணா பிறந்த நாளுக்கு அதிமுக 5 மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது திமுகவை கதி கலங்கச் செய்துள்ளது. செப்டம்பர் 15_ஆம் தேதி அறிஞ்சர் அண்ணாவின் பிறந்தநாள் நாள் விழா கொண்டாடப்பட இருக்கின்றது. அண்ணாவின் பிறந்த நாளை மிக சிறப்பாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் […]

Categories
அரசியல் பல்சுவை

தொடங்கியது ஓணம் கொண்டாட்டம்…. தமிழக முதல்வர் வாழ்த்து…!!

தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..  கேரள மாநிலத்தில் 10 நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பொழுதிருந்தே ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அத்திப்பூ கோலமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி […]

Categories
அரசியல்

ரூ8,830 கோடி முதலீடு… வெற்றி கண்ட முதல்வர்… ராமதாஸ் பாராட்டு…!!

மூன்று நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்ட முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின்  தலைவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அன்னிய முதலீட்டை  மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தொழில் பயணத்தை முதல்வர் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இப்பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் தேர்தலில் […]

Categories

Tech |