Categories
அரசியல் மாநில செய்திகள்

கேப்டன் வந்தாச்சு ….. ”தேமுதிக அதிரடி அறிக்கை”….. மகிழ்ச்சியில் அதிமுக …!!

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து வரும் 19ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று தேமுதிக அறிவித்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

டெங்குக்கு Good Bye …. ”வியாழக்கிழமை ஒழிப்பு தினம்” வெள்ளிக்கிழமை ஆய்வு…. சுகாதாரத்துறை அதிரடி …!!

தமிழகத்தில் இனி வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் டெங்குவை எப்படி கட்டுபடுத்துவது என்பது தொடர்பாக தலைமைச் செயலாளர்கள்  அனைத்து மாவட்ட  ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை முடிவை பார்த்தோமென்றால் முக்கியமான சில முடிவுகளை எடுத்துள்ளார்கள். வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில்   அதற்க்கு முன்னதாகவே தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பருவமழை வந்த பின்பு டெங்கு இன்னும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஏம்பா…!! இவ்வளோ நேரம் நிக்குற ….. உனக்கு கால் வலிக்காதா ? முக.ஸ்டாலின் நெகிழ்ச்சி …!!

நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து அம்பலம் பகுதியில் மு க ஸ்டாலின் திண்ணை பிரச்சாரம் செய்து வருகின்றார். அதில் அவர் மகளிர் சுயஉதவிக் குழுக்களிடையே பேசும் போது , திமுக ஆட்சி காலத்தில் நான்   உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது மகளிர் சுயஉதவிக்குழு என்னுடைய துறையில் இருந்தது. அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த தேர்தல் வந்தாலும்….. ”அதிமுக வெற்றி நிச்சயம்”…. OPS உறுதி …!!

நான்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் நிச்சயம் வெற்றிபெறும் என்று துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய துணை முதல்வர் O.பன்னீர் செல்வம், உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடக்க வேண்டிய நேரத்தில் உறுதியாக நடக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக சீமான் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : 3,48,503 பேருக்கு….. ”ரூ 8,4000 முதல் ரூ 16,000” இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு …!!

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை  சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி நெருங்கி கொண்டு  சமயத்தில் அனைவரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்பிலும் போனஸ் தொகை வழங்குவதற்கான கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக 8.33 சதவிகிதமும், கருணை தொகையாக 11.67 சதவிகிதம் என மொத்தம் 20 %  போனஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களை வாட்டி வதைக்கும் டெங்கு…. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்…!!

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் பார்வையிட்டு நோயாளிகளிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 47 பேருக்கு டெங்கு அறிகுறி இருப்பதாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்படுத்தியுள்ளோம் ”டெங்குவை” தமிழக அரசு தகவல் …!!

தமிழகத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று வழக்கறிஞ்சர் சென்னை சூரியபிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை இன்று நடந்த பொது தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டதில்  தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருச்சி , கோவை , திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஏடிஸ் கொசுவை கண்காணிக்க குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில்20,000_த்திற்கும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்…… பேனர் வைத்த அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்….!!

உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டிர்கள் என்று சுப ஸ்ரீ வழக்கில் பேனர் வைத்த அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதால் அவர் உடல் நசுங்கி பலியானார். இதையயடுத்து பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

Breaking : ”நடிகர் சங்க தேர்தல் செல்லாது” தமிழக அரசு வாதம் ….. !!

நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் செல்லாது என அறிவிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டதுள்ளது. நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்கு மற்றும் உறுப்பினர் நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த ஜூன் 23-ம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தலில் 70% பேர் வாக்களித்திருக்கிறார்கள். பதவி காலம் முடிந்துள்ளதால் நடிகர் சங்க பணிகள் தேங்கி கிடக்கின்றது. உடனே வாக்கு எண்ணிக்கை […]

Categories
அரசியல்

”எல்லாமே திமுக தான்” கருத்துக்கணிப்பில் அரண்டு போன அதிமுக …..!!

நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக கூட்டணியே 3 தொகுதிகளிலும் வெற்றிபெறுமென்று கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. ஏனைய […]

Categories
மாநில செய்திகள்

மருமகளை வரவேற்க …. மகளை கொன்றுள்ளீர்கள் ….. சுபஸ்ரீ வழக்கில் நீதிபதி காட்டம் …!!

சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் ஜாமீன் மீதான வழக்கு விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த I.T  ஊழியர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

”டெங்குவை கட்டுப்படுத்துங்க” கலெக்ட்டர்களுடன் தலைமை செயலர் ஆலோசனை …!!

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாக தகவல் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தமிழக தலைமை செயலாளர் தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகின்றார். காலை 11 மணி முதல் 2 மணி வரை 15 மாவட்ட ஆட்சியருடனும் , மாலை 3 மணி முதல் 5 மணி வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1,64,00,000 பேர் வாக்காளர் பட்டியல் திருத்தம் – சத்யபிரத சாகு

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இதுவரை 1 கோடியே 64 லட்சம் பேர் திருத்தம் செய்துள்ளதாக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, பெயர் திருத்தம், நீக்கம், சேர்த்தல் ஆகிய பணிகளுக்காக அறிவிக்கப்பட்ட அவகாசம், இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்காளர்கள் வருகிற நவம்பர் 18ஆம் தேதி வரை சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இப்பணிகளை ஆய்வு செய்ய பத்து ஐஏஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தலைமைத் தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ மரணத்தால் ”1 பேனரும் வைக்காத அதிமுக” மக்களின் பாராட்டு குவிகிறது ….!!

சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தமிழகம் , பாமக இருவருக்கும் ஸ்வாகா ….. இடியாப்ப சிக்கலில் அதிமுக ….!!

கோரிக்கையை அதிமுக நிறவேற்ற தயங்குவதால் பாமக கூட்டணியை விட்டு விலகுவது உறுதியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி , NR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் வெற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலக்கத்தில் அதிமுக…. நாங்க 10 வைத்தோம் …. ஓடப்போகும் பாமக ……!!

புதிய தமிழகம் கட்சியை தொடர்ந்து பாமகவும் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற இருக்கின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் ,புதிய நீதிக்கட்சி , NR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடு செய்து தேர்தலை சந்தித்தன. ஆனால் தேனியில் போட்டியிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரை தவிர வேறு யாரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஷாக்…..”கட்சி பெயர், கொடி பயன்படுத்தாதீங்க” கிருஷ்ணசாமி அதிரடி…!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவில்லை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் டாக்டர்.கிருஷ்ணசாமி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, “கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பள்ளர், குடும்பர், காலாடி ,பன்னாடி, மூப்பர், தேவேந்திரகுலத்தான் உள்ளிட்ட ஆறு பெயர்களில் அழைக்கக் கூடிய ஒரு சமுதாய மக்களை தேவேந்திரகுல வேளாளர் என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தோம். (நெல்லை மாவட்ட வாதிரியார் சமூக மக்களும் இதில் […]

Categories
மாநில செய்திகள்

”கர்நாடகாவுக்கு அனுமதி கொடுக்காதீங்க” முதல்வர் – மத்திய அமைச்சருக்கு கடிதம் …!!

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்  ஷெகாவத்துக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு நிலைகளில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழக முதலமைச்சர் தற்போது மத்திய ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்  ஷெகாவத்துக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக கர்நாடகாவின் திட்ட அனுமதிக்கு அனுமதியை மத்திய அரசு வழங்க கூடாது என்று தனது கடிதத்தின் வாயிலாக தமிழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”விசுவாசம் இல்ல” பாஜகவின் காலில் விழுகிறார் … அசிங்கப்பட்ட EPS …!!

முதல்வர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கே விசுவாசமில்லாத பழனிசாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்கப்போகிறார்? என்று சீமான் அவேசம் அடைந்துள்ளார் . இதுகுறித்து அவர் தெரிவித்த்தில் , தமிழகத்தில் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவின் காலில் விழுந்து வருகிறார் பழனிச்சாமி. முதலமைச்சர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கு விசுவாசமில்லாத பழனிச்சாமி தமிழக மக்களுக்கா விசுவாசமாக இருக்க போகிறார். மக்களின் வாக்கை பெறாதவர் அமைச்சராக முடியாது என்ற சட்டம் கொண்டு வரவேண்டும் சீமான் ஆவேசமாக தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சொத்தை பாதுகாக்க குடும்ப அரசியல்” ஸ்டாலின் மீது அமைச்சர் பாய்ச்சல் …!!

சொத்துக்களை பாதுகாக்கவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடும்ப அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.  நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தெருக்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்த அமைச்சர் RB உதயகுமார் அதிமுக ஆட்சியில்தான் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறி உள்ளதாக தெரிவித்தார். அதேபோல் தமிழக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் தலையில் இடி….. அதிகரிக்கும் மின் இணைப்பு கட்டணம் ……!!

புதிய மின் இணைப்புக்கான கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்கள் , புதிய தொழில் தொடங்க இருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் பால் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. முன்னதாக பஸ் கட்டணம் , கேஸ் , சிலிண்டர் , பெட்ரோல் , டீசல் ஆகியவற்றின் விலையை மத்திய மாநில அரசுகள் கடுமையாக உயர்த்தியுள்ளன. அடுத்த அதிரடியாக தற்போது தமிழக அரசு புதிய மின் இணைப்புக்கான கட்டணத்தை கடுமையாக உயர்த்தி அறிவித்துள்ளது. இது பொதுமக்களை பெரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கும்… பொன். ராதாகிருஷ்ணன்.!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு  பாஜக ஆதரவு அளிக்கும் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : ஆதரவு தாருங்கள்… பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.!!

 இடைத்தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என பொன் ராதாகிருஷ்ணனை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில்  நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 சட்ட மன்ற தொகுதிகளுக்கு வரும் 21 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ் செல்வனும், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி வெ.நாராயணனும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வைத்து முன்னாள் மத்திய அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாபுரம் தொகுதி : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை.!!  

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வரும் 23ஆம் தேதி வரை வெளியிட இடைக்கால  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016 – ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும்  திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வெற்றி செல்லாது என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில்  203 தபால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விக்கிரவாண்டி 3… நாங்குநேரி 3… முதல்வர் எடப்பாடி அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அக்.12 முதல் 18ஆம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை செய்கிறார்.  வருகின்ற 21-ஆம் தேதி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதில் அதிமுக,  திமுக, காங்கிரஸ், நாம்தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்புமனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்து ஏற்கப்பட்டு இறுதி பட்டியல் வெளியிடப்பட்டன ஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் இரண்டு தொகுதிகளிலும் பரப்புரை செய்யும் நாட்களை திமுக அறிவித்து விட்டது. இந்நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

3 தொகுதி இடைத்தேர்தல் : அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்பு.!!

3 தொகுதி இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, தமிழ்நாடு காங்கிரஸ், நாம் தமிழர், என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அனைவரும்  வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்றுடன் (30ஆம் தேதி) வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை இன்று நடைபெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ மேல் முறையீடு.!!

ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை நடத்த உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக  இன்பதுரை அவசர மேல் முறையீடு செய்துள்ளார்.   கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 மற்றும்  திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ராதாபுரம் தேர்தல் வழக்கு…. “தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்”… உயர் நீதிமன்றம் அதிரடி.!!

ராதாபுரம் தொகுதியில் தபால் வாக்குகளை மட்டும் மீண்டும்  எண்ண சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் இன்பதுரையும், திமுக சார்பில் அப்பாவுவும் போட்டியிட்டனர். இதில் அதிமுகவின் இன்பதுரை 69, 590 திமுகவின்  அப்பாவு  69, 541 வாக்குகளும் பெற்றனர். இதனால் அப்பாவுவைவிட 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றிபெற்றார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் ஓட்டுகளை எண்ணவில்லை என திமுகவின் அப்பாவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் நாராயணன் வேட்பு மனு ஏற்பு.!!

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது  தமிழகத்தில் காலியாக இருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று  அறிவிகப்பட்ட நிலையில், கடந்த 21ஆம் தேதி முதல் தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்தது. கடைசி நாளான நேற்று இரண்டு தொகுதி வேட்பாளர்களும் வேட்பு மனுதாக்கல் […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : ஜெயகோபாலின் மைத்துனர் கைது.!!

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.  சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட்டம் தேன்கனிக்கோட்டையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிக்கு… “2 தொகுதிகளின் இடைத்தேர்தல் ராசியானது”… அமைச்சர் செல்லூர் ராஜூ.!!

அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் இடைத்தேர்தல் அமைந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ இது பற்றி  பேசியதாவது, அதிமுகவிக்கு ராசியான தேர்தலாக 2 தொகுதிகளின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு”… கேப்டன் விஜயகாந்த் உறுதி.!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு தருவதாக  கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு  சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அதிமுக சார்பில்  விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.   இந்நிலையில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது  இல்லத்தில் வைத்து  தமிழக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பேனர் வைக்க அனுமதி பெறப்பட்டதா…? தெரியாது….. 4 பேரை விடுதலை செய்த நீதிமன்றம்…..!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம்  தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]

Categories
மாநில செய்திகள்

”பேனர் வைத்தது தவறு தான்” ஒத்துக்கொண்ட அதிமுக பிரமுகர்……!!

பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகோபால் பேனர் வைத்ததை தவறு என்று ஒத்துக்கொண்டார் . அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா குறித்து சாலையோரத்தில் வைத்திருந்த பேனர்  அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ மேலே விழுந்ததில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது பின்னல் வந்த லாரி மோதி அவர் மீது ஏறி சுபஸ்ரீ சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெயகோபால் […]

Categories
மாநில செய்திகள்

கொடி கட்டுனீங்களா ? ”உங்களுக்கும் ஜெயில் தான்” மேலும் 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்….!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 4 பேர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர். அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம்  தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]

Categories
மாநில செய்திகள்

”ஜெயகோபால் ஜெயிலுக்கு போ” நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை 14 நாட்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ பேனர் விவகாரம் : ”மேலும் 4 பேர் கைது” ரகசிய இடத்தில வைத்து விசாரணை….!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது பேனரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது…. “சற்று ஆறுதல் தருகிறது”… சுபஸ்ரீ தாயார் பேட்டி..!!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.  சென்னையில் கடந்த 12ஆம் தேதி குரோம்பேட்டையை  சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் தாமாக […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ பலியான விவகாரம் : பேனர் வைத்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது..!!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.  கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் தாமாக […]

Categories
மாநில செய்திகள்

“பேனரால் சுபஸ்ரீ பலியான விவகாரம்”… திருச்சி, ஒகேனக்கல்லில் ஜெயகோபாலை தேடும் தனிப்படை போலீஸ்.!!

சுபஸ்ரீ மரண விவகாரத்தில் தலைமறைவான ஜெயகோபாலை திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீஸார் தீவிரமாக  தேடி வருகின்றனர்  கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

”நடிகர் விஜய் சொன்ன வார்த்தை” ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள் …. குவியும் பாராட்டு…!!

பிகில் படத்தில் நடிகர் விஜயின் கருத்தை உள்வாங்கிய ரசிகர்கள் இன்று   #SaveTheniFromNEUTRINO என்ற ஹாஷ்டாக்_கை ட்ரெண்ட் செய்து  வருகின்றது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா-வில் நடிகர் விஜய் தனது  பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடிய விஜய் தனது ரசிகர்கள் இது போன்ற சமூக பிரச்சனைகளுக்கு ஹேஷ்டேக் போடுங்க என்று அறிவுறுதினார். நடிகர் விஜயின் அறிவுரையை ஏற்றுக் கொண்ட ரசிகர்கள் அன்றே #JusticeForSubaShree என்ற    ஹேஷ்டேக்_கை ட்ரெண்ட் செய்தனர். அதை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ”மாணவர்களின் கைரேகை வாங்குங்கள்” மத்திய அரசுக்கு கடிதம்……!!

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில் கை ரேகையை பெற வேண்டுமென்று மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம் எழுத இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்த போது நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில் நீட் தேர்வை நடத்துவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் தேசிய தேர்வு முகமை . எனவே நீட் ஆள்மாறாட்டத்திற்கும் ,  தமிழக அரசுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இனி வரக்கூடிய காலங்களில் , அதாவது […]

Categories
மாநில செய்திகள்

Breaking : ”சுபஸ்ரீ உயிரிழப்பு” காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை….!!

பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து  அனுமதியின்றி பேனர் வைக்க கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

109 கோடி செலவில்….. 370 புதிய பேருந்துகள்….. முதல்வர் தொடங்கி வைத்தார்….!!

தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகங்களுக்கு புதிய பேருந்துகளை தமிழக முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 109 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 370 பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்ட பேருந்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளது.போக்குவரத்துறை சார்பில் 1,500 கோடி ரூபாயில் 5 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் சட்டசபையில் 110 விதியின் கீழ் வெளியிட்டார். அதனடிப்படையில் 370 புதிய பேருந்துகள் 109 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் தலைமை செயலகத்தில் இருந்து கொடி அசைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இடைத்தேர்தல் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட அமைச்சர்கள்.!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை தமிழக அமைச்சர்கள் அவரது  இல்லத்தில் வைத்து  நேரில் சந்தித்து இடைத்தேர்தலுக்கு  ஆதரவு கோரினர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக சார்பில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும் நாங்குநேரியில்  ரெட்டியார்பட்டி வெ. நாராயணனும்  போட்டியிடுவார்கள் என்று அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இடைதேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக […]

Categories
மாநில செய்திகள்

பேனர் விவகாரம் : ”மாநகராட்சி உத்தரவுக்கு தடை” நீதிமன்றம் அதிரடி….!!

பேனர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சியின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. விதி மீறி வைத்த பேனரால் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த உயிரிழப்புக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு பேனர் வைக்க கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டனர். அதே போல பேனர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் முறையான அனுமதி இல்லாத  பேனரை அடித்துக் கொடுக்கும் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு 5,000 […]

Categories
மாநில செய்திகள்

“பிகில் சர்ச்சை : “நோட்டீஸ் அனுப்பியது அதிகார துஷ்பிரயோகம்”… திரும்பப்பெற வேண்டும்… கே.எஸ் அழகிரி பாய்ச்சல்.!!

பிகில்  திரைப்படம் நிகழ்ச்சி நடந்ததற்காக கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீசை உயர்கல்வித் துறை திரும்பப்பெற காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 19 ஆம் தேதி  தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக  நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய், சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் வைத்தவரை கைது பண்ணி ருக்காங்க என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”எங்களுக்கு செல்வாக்கு இருக்கு” தேர்தல் நிரூபிக்கும்- முதல்வர் உறுதி….!!

இந்த தேர்தல் மக்கள் செல்வாக்கு அதிமுகவுக்கு இருப்பதை நிரூபித்துக் காட்டும் என்று தமிழக முதலவர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையம் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் , அண்டை மாநிலத்துடன் நல்லுறவில் இருந்து வருகின்றோம். நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் உறுதி. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார். ஆனால் மக்கள் நேர்மாறாக தீர்ப்பளித்தார்கள். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு அதிமுக வேட்பாளர்களை ஓபிஎஸ் இபிஎஸ் அறிவித்துள்ளனர்.  தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு கொடுக்கப்பட்து. அதைத்தொடர்ந்து  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ், மதுசூதனன், கேபி முனுசாமி உட்பட 9 பேர் கொண்ட ஆட்சி மன்ற குழுவினர் விருப்பமனு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர்கள் யார்?…. இன்று காலை அறிவிப்பு..!!

அதிமுக வேட்பாளர்கள் நாளை (இன்று)  காலை  அறிவிக்கப்படுவார்கள் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை 3 மணி வரை விருப்பமனு கொடுக்கப்பட்து. அதிமுக சார்பில் போட்டியிட 90 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில்  நேற்று முன்தினம் மாலை சென்னை ராயப்பேட்டையில் […]

Categories

Tech |