விவசாய வேலைகளை ஆர்வமுடன் கற்றுவரும் 4ஆம் வகுப்பு பள்ளி மாணவன், விவசாய கல்லூரியில் சேர்ந்து சிறந்த விவசாயி ஆகப்போவதாக கூறுகிறான். தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கும் மானாங்கோரை பகுதியைச் சேர்ந்த முகுந்தன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.. இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியின் மகன் பிரகதீஷ் என்பவன் தஞ்சையிலுள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.. கடந்த 7 ஆண்டுகளாக காவேரி ஆற்றில் தண்ணீர் வராததன் காரணமாக பெரும்பாலான […]
