இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறையோடு புதிய ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடுதல், வேலைவாய்ப்புள்ள வெளிநாடுகளுக்கு தகுதியுள்ளவர்களை அனுப்புதல், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம் நடத்துதல் ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் செய்துவருகிறது. இந்நிலையில், அந்நிறுவனம் தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலமாக இங்கிலாந்து நாட்டு சுகாதாரத் துறைக்கு தமிழக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒரு கருத்துருவை […]
