ஒடிசாவில் நடைபெற்ற அக்னி 2 ஏவுகணையின் இரவு நேரச் சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. ஒடிசாவிலுள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில், சனிக்கிழமை இரவு, அக்னி 2 ஏவுகணையில் இரவு நேரத் தாக்குதல் துல்லியத்தைப் பரிசோதிக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது. இந்தியாவில் இரவு நேரத்தில் ஒரு ஏவுகணையைச் சோதிப்பது இதுவே முதல்முறை என்றும் அக்னி-2வின் இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும் பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்தார். 20 மீட்டர் நீளமும் 17 டன் எடையும் கொண்ட அக்னி 2 ஏவுகணை […]
