டெல்லி: குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் டிடிசி பேருந்துகள் எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு பங்கில்லை என ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக, டெல்லியில் ஏற்பட்ட போராட்டத்தில் மூன்று அரசுப் பேருந்துகள், இரண்டிற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. குறிப்பாக, தென்கிழக்கு டெல்லியில் உள்ள நியூ ஃபிரண்ட்ஸ் காலனியில் டி.டி.சி பேருந்துகள்(DDC Buses) தீக்கிரையாக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஒரு காவலரும், […]
