கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சுந்தரம்பிள்ளை நகரில் சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் விநாயகர் கோவிலை இடித்து அகற்றும்படி சென்னை […]
