அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றதை தொடர்ந்து அந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் அந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் […]
