விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி மாணவிகள் நாற்று நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லாபுரம், வாளவாடி, எலையமுத்தூர் போன்ற பகுதிகளில் நெல் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் உடுமலையில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் விவசாயிகளை சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அப்போது மாணவிகள் பாஸ்போபாக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் விதை நேர்த்தி செய்வதால் பூச்சி நோய் […]
