அறிவுரை வழங்கிய சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் ஏற்படுத்தியதாக கூறி இருசக்கரவாகன நிறுவனத்தின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலை கிராமத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராக மனோஜ் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் ரோந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சாலையில் செல்லும் பொதுமக்களிடம் முக கவசம் அணியுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். அந்தசமயத்தில் அதே பகுதியில் இயங்கிவரும் ஜாகீர் உசேன் என்பவருடைய இருசக்கரவாகன நிறுவனத்தில் வழக்கத்தைவிட கூட்டம் […]
