மிடில் கிளாஸ் பெண்கள் வாழ்க்கை குறித்தும், சாதிய வன்மங்களுக்கு எதிராகவும் அதுல்யா ரவி பேசிய வசனங்கள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வெளியான சாட்டை திரைப்படம் பள்ளி மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு படமாக அமைந்தது. இது தமிழக மக்களிடையே விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து கல்வி ரீதியாக அடுத்த சாட்டை என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சென்ற வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. […]
