கலப்பட சிமெண்ட் தயாரித்து சந்தைகளில் புழக்கத்தில் விட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் காவல் துறையினருக்கு செங்காளம்மன் நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் கலப்பட சிமெண்ட் தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சோழவரம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, சிலர் கலப்பட சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். […]
