மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உலகங்காத்தான் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஸ்வரி வெங்கடேஷிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். […]
