தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களாக இருப்பவர்கள் விஜய், அஜித். இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இருவரின் ரசிகர்களும் சண்டையிடும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதனிடையே அவ்வபோது இருவரின் படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஆறுமுறை அஜித்-விஜய் நடித்த படங்கள் நேருக்கு நேராக மோதியுள்ளது. அந்த பட்டியல் இதோ 1996இல் விஜய் நடிப்பில் பூவே உனக்காக மற்றும் அஜித் நடிப்பில் கல்லூரி வாசல் திரைப்படமும் ஒன்றாக திரைக்கு வந்தது. […]
