கொரோனா தடுப்பு நவடிக்கைக்காக நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசால் இதுவரை 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் நிவாரணம் மற்றும் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. […]
