பாகுபலியில் தான் விரும்பியது நிறைவேறாமல்போன நிலையில் ‘ஆக்ஷன்’ படத்தில் அதனை நிறைவேற்ற வாய்ப்பளித்து தனது கனவை சுந்தர். சி நனவாக்கியதாக நடிகை தமன்னா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். சுந்தர். சியுடன் பணியாற்ற மிகவும் விருப்பமாக இருந்தாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். ‘ஆக்ஷன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், நடிகை தமன்னா பேசுகையில், “ஒவ்வொரு படத்திலும் என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் பார்த்துவருகிறீர்கள். இயக்குநர் சுந்தர். சியுடன் பணியாற்றும் வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா […]
