இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் வசித்துவரும் மீனவர்களான முருகன், அப்துல்கலாம், ஜோசப், அசோக்குமார், அந்தோணி போன்ற 29 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வரும் 4 மீனவர்கள் என மொத்தம் 33 மீனவர்களை கடலில் மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மைக்கேல், ராமசாமி, வேல்ராஜ் சண்முகபாண்டியன், […]
