முககவசம் அணியாதவர்களுக்கு ஆணையாளர் நேரடியாக அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிராஸ்கட் ரோடு, பத்தாவது வீதி, காந்திபுரம், 100 அடி ரோடு போன்ற பல பகுதிகளில் கோவை மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் திடீரென கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போது அந்த வீதிகளில் உள்ள கடைகள், ஜவுளிக்கடைகள், ஹோட்டல்கள் என அனைத்திலும் பணிபுரியும் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுகிறாரார்களா என ஆய்வு செய்துள்ளார். அப்போது காந்திபுரம் கிராஸ்கட் […]
