திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை காதலன் கத்தியால் சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொண்ணைரஜபுரம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்துவருகிறார். இவர் ரேஸ் கோர்ஸில் உள்ள ஒரு தனியார் காபி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் இவரது உறவினரான 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வர இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்து விரைவில் அவர்களுக்கு திருமணம் நடத்த […]
