வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ள புதிய நீதி கட்சி தலைவர் A.C.சண்முகம் வேட்மனுவை தாக்கல் செய்தார். வேலூரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற இருந்த தேர்தலானது ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக ஆதரவுடன் போட்டியிட உள்ள புதிய நீதிக் கட்சித் தலைவரான A.C.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் […]
