ஏமாற்றிய காதலன் மீது பெண் ஆசிட்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகேஷ் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் உள்ள மசாஜ் சென்டரில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். அதே மசாஜ் சென்டரில் வேலை பார்த்த மீனம்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி என்பவருக்கும், ராகேஷுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் ஜெயந்திக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. […]
