மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஜானகிராமன் என்பவர் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிரோஷா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்ற ஜானகிராமன் மதிய நேரத்திற்கு பிறகு உடல்நிலை சரியில்லை என கூறி அனுமதி பெற்று வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]
