மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வில்லுக்குறி பகுதியில் தொழிலாளியான ஆல்பர்ட் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆல்பர்ட் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம்- தேங்காப்பட்டணம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஆல்பர்ட் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆல்பர்ட் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வாலிபர்கள் படுகாயமடைந்தனர். இதனை […]
