கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை எம்.ஜி.ஆர் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முஸ்தபா தனது பழ வண்டியில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் கோட்டப்பட்டி பிரிவு சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் முஸ்தப்பாவின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே […]
