Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மரத்தில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலி…மேலும் 7 பேர் காயம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில்  பெண் ஒருவர் பலியானதோடு மேலும் 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இறப்பு வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக செல்வதற்காக திருப்பூரிலிருந்து சிவகிரிக்கு காரில் 8 பேர் சென்றுகொண்டிருந்தனர் .அப்போது  கார் கிருஷ்ணன் கோவில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.  இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில்  பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும்  விபத்தில் பலத்த காயமடைந்த 7 பேரை அக்கம் பக்கத்தினர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே பேருந்து தீ விபத்து…உயிர்தப்பிய பயணிகள்…!!

ஓசூர்அருகே தனியார் பேருந்து தீப்பிடித்த  விபத்தில் 20 பயணிகள் அதிஷ்டவசமாக  உயிர்தப்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 20 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து திருப்பூர்க்கு பயணித்த  தனியார் பேருந்து ஒசூர்_ கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக  தீப்பிடித்து எரிய தொடங்கியது. பேருந்து ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால்  அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து பேருந்தில் பற்றிய தீயை அணைத்து பேருந்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மினி பஸ் கவிழ்ந்ததில் 20 பேருக்கு காயம் …

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே, மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் . ஆலங்குளதிற்கு  சென்று கொண்டிருந்த மினி பஸ் , துத்திக்குளம்  சாலை அருகே வளைவில் அதிவேகத்தில் திரும்பியபோது,  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில்   ஓட்டுனர் அருள்ராஜ், நடத்துநர் பால்ராஜ் மற்றும் 23 பயணிகள் காயமடைந்தனர். ஆலங்குளம் அரசு மருத்துவமனை மற்றும் பாளையங்கோட்டை மாவட்ட மருத்துவமனைகளில், அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் .இதுக்குறித்து  ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர் .

Categories
உலக செய்திகள்

136 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானம் ஆற்றில் விழுந்து விபத்து….!!

புளோரிடாவில் இருந்து 136 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 136 பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும் போது நிலை தடுமாறி விமான நிலையம் அருகே உள்ள ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் விழுந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

குடிபோதையில் கார் ஓடி விபத்து…. மூதாட்டி உட்பட 2 பேர் பரிதாப பலி…!!

சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  சென்னை வில்லிவாக்கத்தில் குடி போதையில் ஒருவர் கார் ஓட்டியதில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். கார் மோதியதில் மூதாட்டி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மது போதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் விபத்தில் சிக்கிய பெண் பலி…கார் ஓட்டுநர் கைது…!!

அருப்புக்கோட்டை அருகே கார் விபத்தில் சிக்கிய  பெண் பலியான சம்பவத்தில் குற்றவாளியான கார் ஓட்டுநர் கைதாகியுள்ளார்.   விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ,சங்கரேசுவரி, குருவலட்சுமி,முருகேசுவரி செல்வி ஆகியோர்  விறகு ஏற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் . சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்றபோது அந்த வழியே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து   இவர்கள்  மீது மோதியதில் நான்கு பேரும்  தூக்கி வீசப்பட்டனர். இவ்விபத்தில் சிக்கியவர்களை  விரைந்து சென்று அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் முன்பே  குருவலட்சுமி இறந்து விட்டார். இதையடுத்து பலத்த காயமடைந்த  மூவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதல்”விபத்தில் 3 பேர் பலி,17 பேர் படுகாயம்!!..

அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வேன் மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய சம்பவம் ,அப்பகுதியில் இருந்தவர்களின் மனதை பதற வைத்துள்ளது. நாகை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் நித்தியானந்தம் இவர் கும்பகோணம் அருகே உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இன்ஜினியரிங் படித்து வருகிறார் நித்தியானந்தமும் அவரது நண்பர்களும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவில் ஒன்றில் தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர் இந்நிலையில் தரிசனத்தை முடித்துவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர் அப்போது அதிகாலை 7 […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரம் அருகே ஆம்னி பஸ் விபத்தில் சிக்கி பெண் பலி…!!

திண்டிவன சாலையில்  நின்று கொண்டிருந்த பெண் மீது ஆம்னி  பஸ் மோதியதில்  பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் புதுவை பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவரது  மகன் கேரள மாநிலதில் வேலை பார்த்து வருகிறார். மாலதி அவரது மகனை பார்க்க செல்வதற்காக  பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இதற்காக இரவு புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு வந்த மாலதி  திண்டிவனம்-சென்னை நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார்.  இந்நிலையில் அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாலதி மீது  மோதியது. […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இருசக்கர வாகனத்தில் கார் மோதி விவசாயி பலி “திருச்சியில் நடந்த சோகம் !!..

திருச்சி to திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விசாயி மரணம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் இவர் விவசாயம் செய்து வருகிறார் நேற்றைய தினம் காலை ஊரிலிருந்து பக்கத்து ஊருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் அவரது இரு சக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவையில்லாத வேகத்தடை… பஸ்- லாரி மோதல்…!!

முதுகுளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடையால், முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது, டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி, முதுகுளத்தூர் சாலை வழியாக கடலாடிக்கு நேற்று மதியம் தனியார் பேருந்து வந்தது. அப்பொழுது அங்கிருந்த வேகத்தடையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் உடைந்து சிதறியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. லாரி, பேருந்து சேதமடைந்து நின்றதால் அந்தப்பகுதியில் நீண்ட நேரம் வாகன போக்குவரத்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார் விபத்தில் சிக்கி 5 பேர் பலி” திருநெல்வேலி அருகே சோகம்…!!

ஆலங்குளம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த உள்ள கரும்புளியூத்தி சாலையில்  காரில் 5 பேர் சென்றுக்கொண்டிருந்தனர் . அப்போது அங்கு எதிர்பாராத விதமாக லாரி அவர்கள் மீது படுபயங்கரமாக மோதியதில்  காரில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கள் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார் லாரி மோதி கொடூர விபத்து” குழந்தை உட்பட 5 பேர் பலி…!!

ஆலங்குளம் அருகேயுள்ள  கரும்புளியூத்தில் லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம் அருகேஉள்ள  கரும்புளியூத்து  என்ற இடத்தில் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து தென்காசி செல்லும் இந்த சாலையில், இன்று 6 மணியில் இருந்து 6.30க்கு திருநெல்வேலியில் தென்காசி நோக்கி ஸ்விப்ட் காரும் , தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரின்  முன்பகுதியின் 75 […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பேருந்து கோர விபத்து…. 7 பேர் பலி, 34 பேர் படுகாயம்…!!

உத்திரப் பிரதேசம் அருகே தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில்  7 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர்.  டெல்லியிலிருந்து தனியார் பேருந்து ஓன்று  பனாரஸ் நோக்கி ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ்வே    சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது  உத்தரப்பிரதேசம் மாநிலம் மெயின்புரி என்ற இடத்தில் வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிரக்கின்  மீது பயங்கர சத்தத்துடன் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் முன் பகுதி சின்னா பின்னமாக நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் தறிகெட்டு ஒட்டிய கார்…… 2வயது குழந்தை உள்பட இளம்பெண் பலி…!!

ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் அதிவேகமாக கார் புகுந்து விபத்துக்குள்ளானது, இதில் ஒரு பெண் உள்பட ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்வதால், ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் இந்த சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த […]

Categories
தேசிய செய்திகள்

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரயில் தடம் புரண்டு விபத்து….. காயமடைந்த 13 பேருக்கு சிகிச்சை…..!!

ஹவுரா – புது டெல்லி பூர்வா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் கான்பூரில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில்  13 பேர் காயமடைந்துள்ளார். புது டெல்லியிலிருந்து ஹவுரா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூருக்கு அருகில் சென்ற போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நள்ளிரவு 12.50 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 13 பேர் காயமடைந்ததாகவும் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் ரயில்வே உயரதிகாரி அமித் மால்வியா தெரிவித்தார். இந்த சம்பவம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பேருந்தில் தவறி விழுந்த வாலிபர் பலி…!!

உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்திலிருந்து கீழே விழுந்த இளைஞர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்துள்ள ஆசனூர் ராஜவீதியில் வசிப்பவர் சரவணன் வயது 34 . இவர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தந்தை குணசேகரன் என்பவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் உடல்நிலையை கவனிப்பதற்காக டெல்லியிலிருந்து ரயில் மார்க்கமாக விழுப்புரம் வந்தடைந்தார். பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி உளுந்தூர்பேட்டை  ஆசனுர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

புதிய பைக்… வாலிபர் பரிதாப பலி…!!

வேதாரண்யம் பகுதியில் புதிய பைக் வாங்கி வந்த இளைஞர் எதிரே வந்த பைக் மீது மோதியதில்  சம்பவ இடத்திலேயே பலியானார். நாகப்பட்டினம்  மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் வீரப்பன். அவருடைய  மகன் சிவதாஸ் வயது 22 .  இவர் புதிய பைக் வாங்கி அண்டர்காடு சாலை வழியாக வேதாரண்யத்திற்கு ஒட்டிச் சென்றார். அப்போது எதிரே விஜயராகவனும் , ஞானவிக்னேசும் ஓட்டி வந்த பைக்  சிவதாஸ் மீது எதிர்பாரத விதமாக வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“வாலிபர் உயிரை பறித்து விட்டு தப்பி சென்ற ஓட்டுநர் “காவல்துறை தீவீர தேடல் !!…

சரக்கு வேன் மோதி வாலிபர் இறந்த சம்பவம் நாமக்கல் மாவட்டம் நாகூர் பகுதி மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது  நாகூரை அடுத்த காரைமேடு பகுதியை சேர்ந்தவர்  கவியரசன் .இவர் நேற்று இரவு ஒரு சிறு பணிக்காக நாகூருக்கு  மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று கொண்டு இருக்கும் பொழுது நான் ஊருக்கு முன்பாக உள்ள தேரடி  பகுதியில் உள்ள மெயின் சாலையில் வந்த சரக்கு ஏற்றிச் செல்லும் வேன் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் விபத்தை ஏற்படுத்திய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கோவிலுக்கு சென்ற கணவன் மனைவி விபத்தில் சிக்கிய பரிதாபம் “

புத்தாண்டை முன்னிட்டு கோவிலுக்கு சென்று வந்த தம்பதியினர் விபத்தில் சிக்கியது அப்பகுதி மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது    பேராவூரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் தான் ராமமூர்த்தி, இவரது மனைவி நாகம்மாள், இருவரும் நேற்றைய தினம் மாலையில் கிராமத்திற்கு அருகிலுள்ள  கோவிலுக்கு சென்று புத்தாண்டை முன்னிட்டுவழிபட்டுவிட்டு இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர் அப்பொழுது  கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது சம்பைப்பட்டினம் என்ற இடத்தில் எதிரே வந்த கார் மோதி 2 பேரும் படுகாயமடைந்தனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தருமபுரியில் கோர விபத்து… இருவர் பலி..!!

தருமபுரியில்  கட்டிட வேலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற சரக்கு லாரி  தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் பலியாகினர். தருமபுரி மாவட்டம் அருகே கட்டிட தொழிலாளர்களை வேலைக்கு ஏற்றி சென்ற சரக்கு லாரி தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். குளியனூரிலிருந்து- ஏரியூருக்கு கட்டிட தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு சரக்கு லாரி  சென்று கொண்டிருந்தது. இதில் சிமெண்ட் மற்றும் கற்களை கலக்கும் கலவை எந்திரமும் ஏற்றப்பட்டிருந்தது. குமாரசாமிப்பேட்டையின்  மேம்பாலம் அருகே மின்னல் வேகத்தில் சரக்கு லாரி சென்ற போது கலவை எந்திரத்தின் அதிக எடை காரணமாக ஓட்டுனரின் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் வாகன விபத்தில்… முதியவர் பலி…!!

கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிகொண்ட  விபத்தில் முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி கண்ணகி தெருவில் உள்ள  திருமலை நகர் பகுதியில் வசித்துவருப்பவர் அருணாச்சலம் இவரது வயது 67. இவர் நேற்று  முன்தினம் இரவு கூடுவாஞ்சேரியில் இருந்து அறுக்கிலுள்ள மாடம்பாக்கம் செல்லும் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேம்பாலத்தின்  வலது புறமாக திரும்பும் போது எதிர்  திசையில் இருந்தது வந்த மோட்டார் சைக்கிள் அவர்  அருணாச்சலத்தின் மோட்டார் சைக்கிள் மீது  மோதியது.     இதில் மோட்டார் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கணவனைக் கொன்று விட்டு விபத்து என நாடகமாடிய மனைவி கள்ளக்காதலனுடன் கைது!!…

கள்ள காதலனுடன் வாழ ஆசைப்பட்டு சொந்த கணவனே மனைவியை கொலை செய்தது தருமபுரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கிராமத்தை  சேர்ந்தவர் மணி என்பவரது மகன் வெங்கடேசன் கட்டிட தொழிலாளியான இவர் முனியம்மாள் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் இந்நிலையில் வெங்கடேசன் தனது மனைவி முனியம்மாளுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார் . மாமியார் வீட்டில் விருந்து தனது வீட்டிற்கு புறப்பட்ட வெங்கடேசன், தனது மனைவியுடன் மோட்டார் […]

Categories

Tech |