Categories
மாநில செய்திகள்

மீட்பு பணியில் நீடிக்கும் சிக்கல்……. குழந்தை சத்தம் கேட்கவில்லை…….. அமைச்சர் தகவல்….!!

ஆள்துளை கிணற்றில் சிக்கிய சுஜித் சத்தத்தை தற்பொழுது கேட்க முடியவில்லை என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார். குழந்தையை  மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து 15 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குழந்தை மீட்பு குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுஜித் உள்ள போயி 15 மணி நேரமாச்சே… பொதுமக்கள் புலம்பல் …!!

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித்துக்கு தேவையான ஆக்ஸிஜன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்நிலையில் குழந்தையை சுற்றியுள்ள மண் துகள்களை அகற்றுவதற்காக இரண்டு அங்கலமுள்ள குழாய் ஒன்று செலுத்தப்பட்டது. இப்போது குழாயை வெளியே எடுத்துள்ள நிலையில், குழந்தைக்கு தேவையான […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSujith சுஜித்தை மீட்க ட்விட்டரில் கைகோர்க்கும் பிரபலங்கள்…!!

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணியில் 14 மணிநேரமாக தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக பிரபலங்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளை காணலாம்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார். இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING : உசிலம்பட்டி அருகே சோகம்…. லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலி…!!

மதுரை அருகே விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மதுரை உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் லாரியும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. லாரி மோதியதில் ஆட்டோவில் வந்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பள்ளி மாணவிகள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்தும், பலியானவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கவனக்குறைவு” பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த 2 வயது சிறுமி…… திண்டுக்கல்லில் சோகம்…!!

திண்டுக்கல்லில் அக்காவை பள்ளி வாகனத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துவர அத்தையுடன் சென்ற 2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுமி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் பள்ளியில் படிக்க மற்றொரு குழந்தை சிறு குழந்தையாகும். இந்நிலையில் இவரது உறவினர் சசிகலா என்பவர் நேற்றைய தினம் மூத்த குழந்தையை பள்ளி வாகனத்தில்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குண்டும் குழியுமான குன்றத்தூர் சாலை…….. அச்சத்தில் வாகனம் ஓட்டி திரியும் வாகன ஓட்டிகள்….!!

குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ள போரூர் to குன்றத்தூர் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். சென்னை நகரத்தின் மிக முக்கிய நுழைவு வாயிலாக கருதப்படுவது போரூர் டு குன்றத்தூர் சாலை. இந்த சாலையை சென்னையைச் சுற்றியுள்ள நந்தம்பாக்கம், சோமங்கலம், சிறுகளத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சுத்திகரிப்பு குடிநீர் கொண்டு செல்வதற்காக கோவையில் பிரபல […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சோக சம்பவம்…. தனியார் பள்ளி வாகனம் மோதி 2 வயது சிறுமி பலி..!!

 2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வாண்டரான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர்களது உறவினர் சசிகலா மஞ்சுவின் மூத்த குழந்தையை பள்ளியிலிருந்து அழைப்பதற்காக இளைய குழந்தையான மகிழ்மித்ராவுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் முன் பகுதியில் மகிழ்மித்ரா சென்றுள்ளார். ஓட்டுநர் கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதால் […]

Categories
தேசிய செய்திகள்

லாரி மீது பேருந்து மோதி விபத்து…. இருவர் உயிரிழந்த சோகம்..!!

பீகாரில் 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிகார் மாநிலம் கதிஹார் நகரில் உள்ள முசாபர்பூரிலிருந்து சிலிகுரிக்கு 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து டுமர் கிராமத்திற்கு அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை-31 அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தந்த நிலையில், காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை…. உயிர் தப்பிய மாணவர்கள்….. நாமக்கல்லில் பரபரப்பு….!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த அப்பகுதியில் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்  மாவட்டம் பரமத்திவேலூர்  பகுதியை அடுத்த குப்புச்சிபாளையத்தில்   செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 240க்கும்  மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் மேற்கூரை அதிகாலையில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் அமரும் மேசை பாடப்புத்தகங்கள் வைக்கும் கல்லாலான அலமாரி உள்ளிட்டவை சேதமடைந்தன. பள்ளி நேரத்தில் இந்த விபத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்….. 33 பேர் படுகாயம்….. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் நேருக்கு நேர் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 33 பேர்படுகாயம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து சேலம் நோக்கி அரசு டவுன் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அயோத்திப் பட்டணம் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. அதேசமயத்தில் அவ்வழியாக கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு சின்ன கவுண்டர் புறம் நோக்கி  தனியார் கல்லூரி பேருந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து….. 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து வேடசந்தூர் அருகே கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாயக்கன்பட்டி என்ற இடம் சென்றபொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அரசின் அலட்சியம்” விபத்துக்குள்ளான 40 மாணவர்கள்…… கொந்தளிப்பில் கிராம மக்கள்….!!

மதுரையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 40 மாணவர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வடசேரி சாத்தியார் கிராம ஓடையில் பாலம் ஒன்று 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு போக்குவரத்து வசதிக்காக திறந்துவிடப்பட்டது. தற்பொழுது அந்த பாலம் சேதம் அடைந்து இடியும் நிலையில் காணப்படுவதால் அந்த வழியாக ஊருக்குள் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளன.  இதன் காரணமாக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ஒரே ஒரு அரசு பேருந்தும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கடற்கரைகளில் தொடரும் மரணம்…. போலீஸ் நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு….!!

சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் அதிக அளவு உயிரிழப்புகள் நிகழ்ந்த பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை காவல்துறையினர் நட்டு வருகின்றனர். சென்னை திருவெற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள கேவி குப்பம், ஒண்டிகுப்பம், கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிகளுக்கு சென்று குளிப்பதற்கு முன்பு செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து உயிரிழப்பு அதிகம் நடைபெற்ற இடங்களில் அதனை தடுக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

”தண்டவாளத்தில் சிக்கிய கைலி” மாண்டு போன நகைக்கடை தொழிலாளி ….!!

தூத்துக்குடியில் தண்டவாளத்தில் கைலி சிக்கியதால் ரயிலில் அடிபட்டு நகைக்கடை தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.  தூத்துக்குடி சுந்தரராமன் புரத்தைச் சேர்ந்த பாலகணேஷ் என்பவர் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது தூத்துக்குடி நான்காவது ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பொழுது அவரது கைலி தண்டவாளத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த முத்துநகர் விரைவு ரயில் பால கணேஷ் மீது வேகமாக மோதியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில்…. வெடித்து சிதறிய வீட்டின் கதவுகள்… காற்றை அடைத்ததால் ஏற்பட்ட விபரீதம்…!!

சென்னையில் திடிரென்று வீட்டின் அனைத்து கதவுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அடுத்த நேருநகர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் நேற்றைய தினம் தனது மருமகள் பேரன் ஆகியோருடன் வீட்டின் அனைத்துக் கதவு மற்றும்  ஜன்னல்களை மூடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் வீட்டின் உள் அறையில் ஏசி ஆன் செய்திருந்ததால் அந்த கதவையும் பூட்டிவிட்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் வீட்டில் இருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகை யாஷிகா சென்ற கார் விபத்து”… இளைஞர் படுகாயம்.!

சென்னையில் நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்.  சென்னை நுங்கம்பாக்கத்தில் ஹாரிங்டன் சாலையோரம் உணவை டெலிவரி செய்யும் ஊழியரான பரத் என்பவர் நள்ளிரவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு கார் ஓன்று திடீரென அவர் மீது வேகமாக மோதியது.  இதில் அவர் படுகாயமடைந்தார். மேலும் இந்த விபத்தில் அருகில் இருந்த கடை ஒன்றும் பலத்த சேதமடைந்தது. இதுகுறித்து காவல் துறையினர் கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திருமணமான 1 வாரத்திற்குள்… உடல் நசுங்கி இறந்த மனைவி… கதறிய கணவன்… சாலை விதிமீறலால் நடந்த சோகம்…!!

கள்ளக்குறிச்சியில்  திருமணமான சில நாட்களில் மனைவி  விபத்தில்  உயிரிழந்த  சம்பவம்  அப்பகுதியில்  சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம்  மாவட்டம்  கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த பொறியாளரான பால முருகனுக்கும்  அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பாலமுருகன் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துள்ளனர். மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாலாவின் நண்பர் சந்தோஷ் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“ஓமனில் கோர கார் விபத்து”… 8 மாத குழந்தையுடன் இந்திய தம்பதி மரணம்… உயிருக்கு போராடும் மற்றொரு குழந்தை..!!

ஓமனில் நடந்த கார் விபத்தில்  ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் அவரது 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது.   ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான கவுசல்லா அஸ்மத்துல்லா கான் என்பவர் துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற 29 வயது மனைவி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 3  வயதில் ஹனியா என்ற மகளும், 8 மாதமான ஹம்சா கான்  என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் காரில் ஓமன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

”மோட்டார் மற்றும் பேருந்து மோதி விபத்து” கிருஷ்ணகிரியில் 3 பேர் பரிதாப பலி…!!

கிருஷ்ணகிரி தபால்மேடு பகுதியில் பேருந்தும் , இருசக்கரவாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர்  உயிரிழந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரையடுத்துள்ள தபால்மேடு அருகே அரசு பஸ் சென்று கொண்டிருக்கும் போது மல்லப்பாடி என்ற கிராமத்தை சேர்ந்த சோமேஸ்வரன் தனது இரண்டு நண்பர்களுடன் ஒரே  இருசக்கரவாகனத்தில் மூன்று பேரும் வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் திருப்பத்தூரை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதினர். இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த சோமேஸ்வரன் மற்றும் அவரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிமுக பேனர் விழுந்து பெண் மரணம்…. கொந்தளித்த மக்கள் போலீசில் புகார்…!!

சென்னையில் அரசியல் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் பெண் மீது சாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பல்லாவரம், கல்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுபஸ்ரீ என்ற கல்லூரி மாணவி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையின் தடுப்புகள் அருகில் இருக்கக்கூடிய மண்டபத்தில் அதிமுக பிரமுகரின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பேனர்கள் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது இருசக்கர […]

Categories
உலக செய்திகள்

நார்வேயில் பயங்கர விபத்து…. சோதனையில் 400 ஹெலிகாப்டர்கள்…. ஏர்பஸ் நிறுவனம் அதிரடி…!!

ஏர்பஸ் நிறுவனம் விபத்தை  தவிர்க்க 400 ஹெலிகாப்டர்களை தரவரிசை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது. நார்வேயில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஏர்பஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக 400 ஹெலிகாப்டர்களை தர பரிசோதனை செய்ய ஏர்பஸ் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. எஞ்சினிற்கும் மின் உற்பத்திக்கும் இடையேயான பகுதிகளை ஆராயுமாறு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஏர்பஸ் நிறுவனம் உத்தரவிட்டு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் டெலிவரி செய்யப்பட்ட 125 s29 உள்ளிட்ட […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் நின்றவர் மீது மோதிய அரசு பேருந்து… ஓட்டுனரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துக்காக நின்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதால் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புனல் நகர் சந்திப்பில் அரசு பேருந்து வந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் அந்த நபர் கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி  மக்களில் சிலர் பேருந்தின் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த வழியாக வந்த பத்துக்கும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டேங்கில் மோதிய பைக்…. பற்றி எரிந்த வேன்…. 1 நபர் மரணம்… 15 பேர் படுகாயம்…!!

அரியலூர் to தஞ்சை நெடுஞ்சாலையில் கீழப்பலூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெரம்பலூரை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் வசித்து வரும் பயாஸ் என்பவரது தந்தை குவைத்  நாட்டில் வேலை புரிந்து வருகிறார். இவரது மகன்கள் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அவரது தந்தையின் நண்பர் தஞ்சாவூர் விடுமுறைக்கு வந்திருந்த நிலையில் அவரை சந்தித்து சில பொருட்களைக் கொடுத்து அனுப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் அரியலூர் டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதல்… 2 பேர் பலி…. ஓசூரில் கோர விபத்து..!!

ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  ஓசூரை அடுத்த கருப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் சதீஷ் ஆகியோர் ஓசூர் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பல்சர் பைக்கில் சென்றுள்ளனர். இதேபோல ராயக்கோட்டை நோக்கி முனிவர்மன் என்பவருடன் சின்ன ரத்தினம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வளைவில் வாகனத்தை  இரு திறப்பினரும் வேகமாக திருப்பியதில் எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு […]

Categories
உலக செய்திகள்

”ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்து”…. ஓட்டுநர் பரிதாப பலி… 34-க்கும் மேற்பட்டோர் காயம்.!!

ஜப்பானில் ரயில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார்.  ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் உள்ள யோகோஹாமா நகரம் அருகே, ரயில்வே கடவு பாதை அமைந்துள்ளது. இந்த பாதை வழியாக இன்று காலை 11:40 மணியளவில் பயணிகள் ரயில் ஓன்று டோக்கியோ நோக்கி செல்ல முயன்றபோது, திடீரென கடவுப்பாதை வழியாக பழங்களை ஏற்றி வந்த லாரி ஒன்று வேகமாக ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சின்னாபின்னமானதோடு மட்டுமில்லாமல் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு கரும்புகை […]

Categories
உலக செய்திகள்

“நடுக்கடலில் திடீர் விபத்து” 2 பேர் மரணம்… 40 பேர் மாயம்… தேடுதல் பணியில் கடற்படை..!!

மத்திய தரைக்கடலில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி 40 பேர் மாயமானதாக கூறப்படுகிறது. லிபியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவதற்கு மத்திய தரைக்கடல் வழியாக சென்றனர். அப்போது அவர்களை  ஏற்றி சென்ற கப்பலில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு நடுவழியில் கவிழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த லிபியா கடற்படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 65 பேர் உயிருடனும்  2 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

“வேன் மீது சரக்கு லாரி கவிழ்ந்து கோர விபத்து” 16 பேர் உடல் நசுங்கி பலி… 5 பேர் காயம்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஷாஜகான்பூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஓன்று சரக்கு ஏற்றிக்கொண்டு  வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு வேன் மீது  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 3 குழந்தைகள் ஒரு பெண் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி […]

Categories
உலக செய்திகள்

காதல் திருமணம்….”சில நிமிடத்தில் மரணம்”…. ஜோடியாய் மாண்டு போன துயரம்…!!

அமெரிக்காவில் காதல் திருமணம் செய்து கொண்ட சில நிமிடத்தில் தம்பதிகள் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிகள் ஹார்லி மோர்கன் , பவுட்ரியாக்ஸ். இவர்கள் தங்களின் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்து இரு வீட்டார்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அங்குள்ள ஆரஞ்ச் கவுண்டி நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்தனர்.பின்னர் புதிய வாழ்க்கை தொடங்க சென்ற அந்த தம்பதிகள் குடும்பத்தினர் கண்முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சரிந்து விழுந்த கல்லூரி கட்டிடம்… “6 பேர் படுகாயம்” கோவையில் பரபரப்பு..!!

கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். கோவை அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் பிரபல பொறியியல் கல்லூரி ஒன்று புதிதாக பிளாக் என்று சொல்லப்படும் பெரிய கட்டிடம் ஒன்றை  கட்டி வந்துள்ளது. இந்த நிலையில் இதற்கான கட்டுமான பணிகள் இன்று நடைபெற்று வந்தன. அப்போது சிமெண்ட் கொண்டு நிரப்படும் மேல் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

மினிவேன் கவிழ்ந்து 8 பேர் பலி-முதல்வர் நிதியுதவி …!!

திருச்சி துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் டயர் வெடித்த மினிவேன் கிணற்றில் கவிழ்ந்ததில் பலியானோர் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் சரக்கு வாகனத்தில் 22 பேர்  பயணம் செய்தனர். கறி விருந்து நிகழ்ச்சிக்காக அந்த சரக்கு ஆட்டோவில் அவர்கள் சென்று கொண்டிருந்த போது வழியில் வண்டியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்து “கிணற்றில் வாகனம் கவிழ்ந்து விபத்து” 8 பேர் பலி… 9 பேர் காயம்..!!

திருச்சியில் கறி விருந்து நிகழ்ச்சிக்கு செல்லும் போது டயர் வெடித்து கிணற்றில் கவிழ்ந்ததில்  08 பேர் உயிரிழந்தனர்.  திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள எஸ்.எஸ் புதூரில் சரக்கு வாகனத்தில் 22 பேர்  பயணம் செய்தனர். கறி விருந்து நிகழ்ச்சிக்காக அந்த சரக்கு ஆட்டோவில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது வழியில் வண்டியின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த நீர் இல்லாத கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது. இதையடுத்து சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் […]

Categories
தேசிய செய்திகள்

”டெல்லி எய்ம்ஸ்ஸில் தீ விபத்து” மும்மரமாக கட்டுப்படுத்தும் வீரர்கள் …!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பல்வேறு சிறப்புப் பிரிவுகள் உள்ளன. இதில் அமைச்சர்கள் , அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த உயர் சிறப்பு  பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் மருத்துவமனையில் முதன்மை கட்டிடத்தின் முதல் தளம் , இரண்டாம் தளம் ஆகியவற்றில் தீடிரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் எழுந்த புகை மூட்டத்தால் அந்த பகுதியே புகை மண்டலமாக […]

Categories
தேசிய செய்திகள்

விளையாட்டால் விபரீதம் … மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் பலி ..!!

ஆந்திராவில் விளையாடிக்கொண்டு இருந்த மூன்று சிறுவர்கள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் .  ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோப்பரா  கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சகோதரர்களான ஷேக் அதான், ஷேக் காசிம் மற்றும் அவரது நண்பர் என் பதான் அமீர் ஆகியோர் அந்த பகுதியின்  கொடிக் கம்பத்தை பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது , திடீரென அந்த கம்பத்தின் அசைவு அதிகமாகி அருகில் இருந்த மின்சார கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி அம்மூவரும் தூக்கி எறியபட்டனர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பைக் மீது அதிவேகத்தில் மோதிய பேருந்து … 2 பேர் சம்பவ இடத்தில் பலி ..!!

கள்ளக்குறிச்சியில் தனியார் பேருந்து மோதி 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் சுரேஷ் என்பவரும் அதே ஊரைச் சார்ந்த சுப்பிரமணியனின் மகன் கார்த்தி என்பவரும் கூத்தக்குடியில்  இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்றனர்  . இந்நிலையில் திரும்பி ஊருக்கு வரும்போது  வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பின்னர் பேருந்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உடல் உறுப்பு தானம் … 6 பேர் மறுவாழ்வு ..!!

வேலூரில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகளை தானம்  செய்ய ஓப்புக்கொண்டதால்  6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. வேலூரில் உள்ள தனியார்  பொறியியல் கல்லூரிகளில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரின் மகன்சவூரணிஸ் கோஷ் என்பவர் இசிஇ 2 – ஆம் ஆண்டு படித்து வந்தார் . இவர் கடந்த 23 ஆம் தேதி ஆம்பூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று […]

Categories
மாவட்ட செய்திகள்

“காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து” பணியாளர்கள் 4 பேர் பரிதாப பலி..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே   காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பஞ்சாலை பணியாளர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.   ஈரோடு – திருப்பூர் எல்லையில் ஆலத்தூர் மேடு பகுதியில் இருக்கும்  பஞ்சாலையின் உதவி மேலாளராக ஜெய்கணேசும்,  மேற்பார்வையாளர்களாக கோவிந்தராஜ், தங்கபாண்டியன், பாரதிராஜா, வீரராகவன், சங்கர் ஆகிய 6 பேரும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும் நள்ளிரவு பணிமுடிந்த பின் 1:30 மணியளவில்  புஞ்சைபுளியம்பட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கோவிந்தராஜ் ஒட்டி சென்றபோது சத்தியமங்கலம் பொன் மேடு என்ற இடத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்டில்  பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து… 7 குழந்தைகள் பலி..?

உத்தரகாண்ட்டில்  பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 குழந்தைகள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது  உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள  தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற இடத்தில் பள்ளி பேருந்து ஓன்று 18 பள்ளி குழந்தைகளுடன் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது  பள்ளி பேருந்து எதிர்பாராத விதமாக அங்கிருந்த தடுப்பு சுவரில் மோதி திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பேருந்தில் பயணித்த 18 குழந்தைகளில் 7 பேர் பலியாகியிருக்கலாம்  என அஞ்சப்படுகிறது. இதனை தொடர்ந்து மாநில பேரிடர் பொறுப்பு படையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து…. பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி..!!

கோவை மாவட்டம் ஈச்சனாரி அருகே இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதியதில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலியானார்.  கோவை மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கேரள மாநிலம் கொச்சியில் இருந்து பெட்ரோல் நிரப்பி விட்டு பெங்களூர் நோக்கி சென்றுள்ளார். மதுக்கரை அடுத்துள்ள ஈச்சனாரி எல்.அன்.டி பைபாஸ் அருகே லாரி சென்றபோது போது எதிரே சேலத்தில் இருந்து பாலக்காடு நோக்கி டைல்ஸ் லோடு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை… மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள மொத்த ஓட்டுநர் உரிமங்களில்  30% போலியானவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்ட  திருத்தம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியபோது, இந்தியாவில் மட்டும்தான் எளிமையான முறையில் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும் என்றும், ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படம் ஓட்டுனருடன் பொருந்துவதில்லை என்றும், அனைவரும் சட்டத்தை மதிக்காமலும் பயமின்றியும் வாகனம் ஓட்டுவதாக தெரிவித்தார்.மேலும்  100 ரூபாய் அபராதம்   குறித்து யாரும்  கவலைப்படுவதில்லை என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் சக்கரத்தில் சிக்கிய பெண்… துணிச்சலுடன் காப்பாற்றிய காவலருக்கு குவியும் பாராட்டு…!!

ஓடும் ரயிலில் ஏற முயற்சித்து தவறி விழுந்த பெண்ணை ரயில்வே காவல் துறை அதிகாரி காப்பாற்றிய சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்றிரவு பெண் ஒருவர்   ரயில் நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் ரயில்  செல்வதை கண்டு அவசர அவசரமாக ஓடிச்சென்று எற முயற்சித்துள்ளார். அப்பொழுது நிலைதடுமாறியதால்  கீழே விழுந்தார். இதில் ரயில்  சக்கரத்தின் இடையில்  சிக்க இருந்த அவரை,ரயில் நிலையத்தில்  வழக்கமாக  ரோந்து பணியில் ஈடுபடும்  ரயில்வே துறை காவலர் ஒருவர் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் சோகம் “ஆற்றில் மூழ்கி 30 பேர் பரிதாப பலி” படகு சவாரியில் விபத்து…!!

பாகிஸ்தான் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கே இருக்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள  ஹரிப்பூர் மாவட்டத்தின் தர்பேலா பகுதி ஆற்றில் அங்குள்ள தோர்கார் மாவட்ட நல அமேஜை கிராமத்தை சேர்ந்த 80 பேர் சவாரி செய்தனர்.  படகு சவாரி மூலமாக அவர்கள் ஹரிப்பூர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பார்க்காத விதமாக படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 30 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் உட்பட மூன்று பேர் பலி…!!

வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெளவுல்ராஜ் இவர் தனது மனைவி ராதிகா மற்றும் குடும்பத்துடன் சேலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.இந்நிலையில்  வாழப்பாடியை  அடுத்த  சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது திடிரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி மறு பாதைக்கு சென்று  எதிரே வந்த லாரியில் மோதி  விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த ராதிகா, ராஜீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மிக் – 21 ரக விமான பெட்ரோல் டேங்க் கழன்று விழுந்து விபத்து…!!

இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மிக் – 21 ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று விபத்துக்குள்ளானது. கோவை மாவட்டம் அடுத்துள்ள  இருகூரில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த மிக் – 21 ரக விமானத்தின் பெட்ரோல் டேங்க் கழன்று தரையில் விழுந்து விபத்து ஏற்பட்டது. விவசாய நிலத்தில் பெட்ரோல் டேங்க் விழுந்ததால் பெரும் சேதம் தவிரிக்கப்பட்டுள்ளது. தரையில் விழுந்த விமானத்தின் 1200 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதால் தரையில்  3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் பலி.!!

ஜம்மு -காஷ்மீர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் கெஷ்வானில் இருந்து கிஷ்வார் நோக்கி பேருந்து ஓன்று சென்றது. அப்போது கெஷ்வான் – தக்ரை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஸ்ரீக்வாரி என்ற பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து காலை 8:40 […]

Categories
அரசியல்

தமிழக – கர்நாடக எல்லையில் விபத்து “கல்லூரி மாணவர்கள் பலி” பதைபதைக்கும் வீடியோ ….!!

முதுமலை தெப்பக்காடு – கக்கனல்லா சாலையில் கர்நாடக அரசு பஸ் மீது  பைக் மோதியதில் இரண்டு கல்லுாரி மாணவர்கள் பலியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் குண்டல்பேட் தெருகனாம்பி பகுதியை சேர்ந்தவர் கோகுல். அதே போல நஞ்சன்கோடு பகுதியை சேர்ந்த சோமன். 21 வயதாகிய இவர்கள் இருவரும் கல்லூரி படிக்கின்றனர். கோகுல் குண்டப்பேட் தனியார் கல்லுாரியிலும், சோமன் அரசு கல்லுாரியிலும் படித்து வந்தனர். இவர்கள் தங்களது நண்பர்கள் 10 பேருடன், ஆறு பைக்குகளில் ஊட்டி நோக்கி சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

“ஏ.என்- 32 விமான விபத்து” 13 பேரின் சடலங்களும், கருப்பு பெட்டியும் மீட்பு..!!

இந்திய விமான படையின் ஏ.என்- 32 விமானம் விபத்துக்குள்ளானதில் 13 பேரின் சடலங்களும், கருப்பு பெட்டியும் மீட்கப்பட்டன  இந்திய விமான படையின் விமானம் ஏ. என்- 32 ஜூன் 3-ம் தேதி அசாம் மாநிலத்தின் ஜோர்கட்டிலிருந்து மதியம் 12.25 மணியளவில் அருணாச்சல பிரதேசதின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டு சென்றது. இதில் 13 பேர் பயணம் செய்தனர்.  இதையடுத்து விமானம் 1 மணியளவில் கட்டுப்பாடு அறையுடனான தொடர்பை இழந்தது. அதை தொடர்ந்து விமானத்தை தேடுவதற்கு இந்திய விமான படை மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளிய கணவன்….!!

ஓடும் காரில் இருந்து மனைவியை கீழே தள்ளி கணவன் கொலை செய்ய முயன்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த அருணும் அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நீதிமன்றம் இருவரும் இணைந்து வாழ கால அவகாசம் கொடுத்ததால், மும்பையில் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை உதறி விட்டு, கணவருடன்  சேர்ந்து வாழ ஆர்த்தி கோவை வந்துள்ளார். மேலும் கோவை வந்த ஆர்த்தியிடம் கணவர் அருண் வரதட்சணை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காவல்துறையினர் மீதும் வழக்கு பதிவு ” ஹெல்மெட் கட்டாயம் ..!!

காவல்துறையினர் ஹெல்மெட் போடாமல் வாகன ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் . தற்பொழுது ஹெல்மெட் கட்டாயமாக போடும் சட்டமானது தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் ஹெல்மெட் போடாமல் இருப்பது மக்களிடையே அதிருப்த்தியை  ஏற்படுத்தி வருகிறது. இதனால் சென்னையில் காவல் துறையில் பிறர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஹெல்மெட் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி ..!!

ஸ்ரீவைகுண்டம் பகுதி அருகே பனைமரத்தில் இருந்து வாலிபர் தவறி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அடுத்த மாரமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் முன்னீர்பள்ளம் அடுத்த கொத்தன் குளம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது  வெயிலின் தாகத்தைத் தணிப்பதற்காக நுங்கை வெட்ட பனை மரத்தில் ஏறியுள்ளார். திடீரென்று எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பனைமரத்தின் உச்சியில் இருந்து செல்வம் கீழே விழுந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

விமானம் தரையிறங்கும் போது தொழில்நுட்ப கோளாறு….. விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு…!!

மியான்மரில் 89 பேரை ஏற்றிச்சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், விமானியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மியான்மர் ஏர்லைன்சுக்குச் சொந்தமான யுபி-103 விமானத்தில்  7 பணியாளர்கள் உள்பட 89 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் அந்த நாட்டு சுற்றுலா நகரமான மாண்டலேவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு தரையிறங்க முயன்றது. அப்போது அந்த விமானத்தின் முன் பக்க சக்கரங்கள் விரிய மறுத்துள்ள நிலையில், உடனடியாக பின்பக்க சக்கரங்களை மட்டும் பயன்படுத்தி அந்த விமானத்தை விமானி சாதுரியமாக […]

Categories

Tech |