லாரி சாலையில் கவிழ்ந்து விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் இருந்து கோழி தீவனங்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை செந்தில்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் மாற்று ஓட்டுனரான முனியப்பன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் இருக்கும் இரண்டாவது வளைவு பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் […]
