Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓட்டி வந்த மினி பஸ்…11 கல்லூரி மாணவிகள் படுகாயம் …1மாணவி கவலைக்கிடம்…!!

மினி பேருந்து ஒன்று, சாலையில் நடந்து சென்ற கல்லூரி  மாணவிகள் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் உள்ள பழைய பாலம் ரோட்டில் , கல்லூரி மாணவிகள் கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.அச்சமயம்  குழித்துறை மேல்புறம் வழியாக செல்லும் ஒரு  தனியார் மினி பேருந்து , கல்லூரி சாலையில் அதிவேகமாக வந்தது. அப்போது, சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் மீதும் ரோட்டில் ஓரமாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” மாநகர பேருந்து டயரில் சிக்கி தாய்-மகள் மரணம்…… சென்னையில் சோகம்….!!

சென்னை கீழ்கட்டளை அருகே மாநகரப் பேருந்து சக்கரத்தில் சிக்கி தாயும் 5 வயது சிறுமியும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூர் பகுதியை அடுத்த திரிசூலம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி சுதா. இவர்கள் இருவருக்கும் ஷிவானி தீபக் ஆகிய 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் சுதா தனது இரண்டு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு  கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு பின் மீண்டும் மாலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டயர் குடோனில் தீவிபத்து …!! 3மணி நேரம் போராட்டம் …!!பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம் …!!

திருச்சியில் டயர் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள்  எரிந்து நாசமாயின. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் டோல்கேட் அருகே கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான டயர் குடோன் ஒன்று உள்ளது .மூன்றடுக்கு கட்டடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ள இந்த குடோனில் இன்று அதிகாலை 4மணி அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இது பற்றி தகவலறிந்து வந்த 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 3மணி நேரமாக போராடி தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர் . சல்பர் கலந்துள்ள […]

Categories
உலக செய்திகள்

பேருந்து மீது வேன் மோதியதில் 15பேர் பலி …!!

பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்று பலூசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும்  கன்மேக்தரசி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த வேன்  கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது .இதனால் இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து  எரிய ஆரம்பித்தது  . இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வருவதற்குள்  இரண்டு வாகனங்களும் முழுவதும்  தீயில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரிமீது மோதியதில் ஒருவர் பலி …!!

தேனி மாவட்டம் அருகே  இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் அதனை ஒட்டி வந்தவர்  எதிரே வந்த லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது .   தேனி அருகே வீரபாண்டியை அடுத்து  உப்பார்பட்டியை  சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனது மனைவி மற்றும் ஒன்பது வயது மகனுடன் இருசக்கர வாகனத்தில் வீரபாண்டி நோக்கி சென்றுள்ளார். அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது குமுளி நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து உள்ளது.   […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமையல் எரிவாயு உருளை வெடித்து தாய், மகள் காயம் ….!!

பேருந்து நிலையில் அருகே குடியிருப்புப் பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் தாய், மகள் காயமடைந்தனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம்மாள் (70). இவர் தனது மகள் அங்குலட்சுமியுடன் அங்கு வசித்துவருகிறார். இன்று காலை, பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் மகள் அங்குலட்சுமி சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு உருளையில் (சிலிண்டர்) வாயுக்கசிவு ஏற்பட்டு திடீரென உருளை வெடித்தது. இதில், […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத்தில் மரத்தின் மீது காருடன் மோதியவருக்கு ரூ.9,500 அபராதம்…!!

நெடுஞ்சாலையில் நடப்பட்டிருந்த மரத்தை காரல் இடித்து சாய்த்த நபருக்கு ரூ.9,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரிதா ஹரம் என்ற சுற்றுச்சூழல் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் மரத்தின் மீது மோதிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “ஹைதராபாத்தில் உள்ள சிதிபெட் பகுதி வழியாக நேற்று மகிந்திரா ஸைலோ எஸ்யூவி ரக காரில் சென்றுக்கொண்டிருந்த நபர் ஒருவர், சாலையின் நடுவே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்லும் போது விபத்து… பாட்டி உயிரிழந்த சோகம்.!!

புதுக்கோட்டையில் பேத்தியின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட சென்ற தம்பதியினரின் இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் பாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் புதூரைச் சேர்ந்தவர்கள் அடைக்கலம் (65), ராஜாமணி (50) தம்பதியினர். இருவரும் பேத்தியின் பிறந்தநாள் விழாவிற்காக புதூரில் இருந்து குறுக்கப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது புல்வயல் – காந்துப்பட்டி பிரிவுரோடு அருகே சென்றபோது, அடைக்கலத்திற்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலை தடுமாறிய அவரால், […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அதிவேகம்” தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுவன் பலி……. ஓட்டுநர் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த பொங்காளி ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர்கள் இருவருக்கும் ஜஸ்வந்த் என்ற 5 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜஸ்வந்த் அதே ஊரில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை நேரத்தில் ஜஸ்வந்த் தனது வீட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” கார் மீது ஏறிய லாரி…… 80 வயது முதியவர் உட்பட 2 பேர் பலி…… லாரி டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு….!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கார் மீது லாரி ஏறியதில் முதியவர் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது வயது எண்பது. இவரும் பெரம்பலூரை சேர்ந்த ராஜராஜன் என்ற இளைஞரும் விருத்தாச்சலம் பகுதியில் இருந்து கும்பகோணம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராஜராஜன் ஓட்டி வந்தார். இதையடுத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது […]

Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய காட்டுத் தீ: புகைக்குள் சிட்னி….!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்சித் தீ வேகமாகப் பரவி வரும் நிலையில், அதிலிருந்து வரும் புகை சிட்னி நகரைச் சூழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதிகளில் சுமார் 50 காட்டுத் தீ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. வேகமாகப் பரவி வரும் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்புப் படையினர் போராடி வருகின்றனர்.இதனிடையே, ஆஸ்திரேலியாவின் முக்கிய வர்த்தக நகரமான சிட்னி புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது. வானைத் தொடும் அடுக்குமாடி கட்டங்களைக்கூட கூட இந்த புகை சூழ்ந்து மங்கலாகத் தென்பட்டன. காற்றின் தரம் இயல்பைவிட 10 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திமுக போராட்டத்தால் வந்த சோகம்…. 16 பேர் காயம் , ஒருவர் கவலைக்கிடம் …!!

திமுக ஆர்ப்பாட்டத்திற்கு வந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அக்கட்சியின் தொண்டர்கள் 16 பேர் பலத்த காயமடைந்தனைர். திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள காஞ்சி ரோடு, அன்வராபாத் கிராமப் பகுதி மக்கள் 18 பேர் மினி லாரியில் வந்தனர். திருவண்ணாமலை அருகேயுள்ள புனல்காடு பகுதியில் வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 16 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனம் மீது குப்பை லாரி மோதி காவலர் உயிரிழப்பு.!!

சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனம் மீது குப்பை லாரி மோதிய விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழந்தார். சென்னை மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பழனிக்குமார். மதுரை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பழனிக்குமார் சென்னை மவுண்ட் காவலர் குடியிருப்புப் பகுதியில் தனது மனைவி விமலா, மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் பழனிக்குமார் தனது பணியை முடித்துக்கொண்டு நள்ளிரவு 12:30 மணியளவில் வீட்டிற்குச் செல்வதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தலைக்கவசம் சரியாக அணியாததால் உயிரிழந்த காவலர்….. விருதுநகரில் கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரம் அருகே முறையாக தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படும் காவலர் நிலைதடுமாறி கீழே விழுந்து  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம்  எம் ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்த சாம் பிரேம் ஆனந்த் என்ற காவலர் முத்துராமலிங்கபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த கொண்டிருந்த பொழுது நாய்  ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாமில் சோக சம்பவம்… லாரி மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் பலி..!!

ஒராங் தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறத்தில், கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் ஒராங் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்தவர்கள் மங்கல்தோயில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு தேஸ்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நேர்ந்துள்ளது. நீண்ட நேரமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் வெங்காய லாரி கவிழ்ந்து விபத்து… போக்குவரத்து பாதிப்பு.!!

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில் வெங்காய மூட்டைகள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடியது திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மைசூரிலிருந்து வெங்காய மூட்டைகள் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று உடுமலைப்பேட்டை செல்வதற்காக இன்று காலை 5 மணியளவில் […]

Categories
தேசிய செய்திகள்

உருண்டோடிய பள்ளிப் பேருந்து…. தாங்கி பிடித்த மின்கம்பம்…… உயிர் தப்பிய குழந்தைகள் …!!

ஓட்டுனர் இல்லாமல், தண்ணீர் நிரம்பியிருந்த ஏரியை நோக்கி உருண்டோடிய பள்ளிப்பேருந்தை அங்கிருந்த மின்கம்பம் தாங்கி பிடித்தது. பேருந்துக்குள் இருந்த ஐந்து குழந்தைகள் உயிர் தப்பினர். பிகார் மாநிலம் பாட்னா அருகேயுள்ள மிதாப்பூர் (Mithapur) பேருந்து நிலையம் அருகே பள்ளிப்பேருந்து ஒன்று நின்றுக் கொண்டிருந்தது. அந்த பேருந்துக்குள் ஐந்து குழந்தைகள் இருந்தனர்.இந்த நிலையில் பள்ளிப் பேருந்து திடீரென உருண்டோட ஆரம்பித்தது. ஓட்டுனர் இல்லாமல் பள்ளிப் பேருந்து ஏரியை நோக்கி செல்வதை பார்த்து பள்ளிக் குழந்தைகள் அழுதனர். பள்ளிக் குழந்தைகளின் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

Breaking : ”ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு” கோவையில் சோகம் …!!

கோவை ராவூத்தர் பாலம் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற நான்கு கல்லூரி மாணவர்கள் ஆழப்புழா – சென்னை விரைவு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று அதிகாலை கோவை தனியார் கல்லூரியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கோவை இருகூர் அருகேயுள்ள ராவுத்தர் பாலத்தின் மீது தண்டவளத்தில் நடந்து சென்றுள்ளனர்.அப்போது ஆழப்புழாவிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த விரைவு ரயில் எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே நான்கு மாணவர்களும் உயிரிழந்தனர்.விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”அதிமுகவுக்கு வந்த சோதனை” பேனரை போல மீண்டும் ஒரு விபத்து …!!

அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததில், பெண் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அனுராதா(30). இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில், நேற்று காலை அனுராதா வேலைக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் கோல்டுவின்ஸ் பகுதி வழியாகச் செல்லும்போது, அதிமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்தது. இதை எதிர்பார்க்காத அனுராதா, உடனடியாக பிரேக் போட்டதில் இருசக்கர வாகனத்திலிருந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

லத்தி வீச்சு….. 3 பேர் படுகாயம்…… 2 வாரத்தில் அறிக்கை….. மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு….!!

பொள்ளாச்சி அருகே வாகன சோதனையில் மோட்டார் சைக்கிள் மீது காவல் ஆய்வாளர் லத்தியை வீசிய சம்பவம் குறித்து 2 வாரங்களில் அறிக்கை அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே சங்கம்பாளையம் சந்திப்பில் வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த சுந்தரா புரத்தைச் சேர்ந்த 3 பேர் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் மீது கோட்டூர் காவல் உதவி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கனமழை” சாலை வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லாரி….. திருப்பூரில் பரபரப்பு…!!

திருப்பூரில் பெய்து வந்த கனமழையின் காரணமாக சாலையில் ஓடிய வெள்ள நீரில் லாரி சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென்று பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. திருப்பூர் முழுவதும் பரவலாக பெய்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.  இதன்காரணமாக வாகனஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வளைவில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ……. ஓட்டுநர் உட்பட 15 பேர் படுகாயம்….!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை கவுந்தம்பாடி பகுதியை அடுத்த பெருமாள் ஆலய தெருவை சேர்ந்தவர் பட்டத்தரசன். இவர் தனது மனைவி அமராவதி அமராவதியின் தங்கை சாந்தி மற்றும் உறவினர்கள் உட்பட மொத்தம் 20 பேருடன் சரக்கு ஆட்டோவில் உறவினரின் இல்ல சுப நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கவுந்தம்பாடி பகுதியை அடுத்த வளைவு ஒன்றில் சரக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்……. சம்பவ இடத்திலையே பலியான ஓட்டுநர்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் சாலையோர தடுப்பு சுவரை இடித்து கொண்டு பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை அடுத்த விட்டல் நாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் அதே பகுதியில் உள்ள நூல் மில்லில் ஜீப் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். நாள்தோறும் மில்லில் பணிபுரிந்து வரும் வேலையாட்களை அவரவர் கிராமத்தில் கொண்டுபோய் இறக்கி விடுவதே இவரது வேலை. அந்த வகையில் நேற்றைய முன்தினம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாயை காப்பாற்ற எண்ணி…… பெண்ணை கொன்ற ஆட்டோ ஓட்டுநர் கைது…….. சென்னையில் பரபரப்பு….!!;

சென்னை சென்ட்ரல் அருகே நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக உறங்கியவர்கள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியானார். சென்னை தண்டையார்பேட்டை யைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் சென்ட்ரலிலிருந்து மூலபக்கம் நோக்கி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே இரண்டு நாய்கள் ஓடியதால் அவற்றின் மீது மோதாமல் இருக்க காளியப்பன் பிரேக் பிடித்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் அஞ்சல என்ற பெண் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டயர் வெடித்துத் தீப்பற்றி எரிந்த கார்… தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு…!!

தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில், மேம்பால பக்கவாட்டில் மோதி கார் முழுவதும் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோ (20). இவர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை நாகர்கோவிலிலிருந்து தனது ஸ்கோடா காரில் பாண்டிச்சேரி நோக்கி திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது மணப்பாறை அருகே இவரது காரின் டயர் வெடித்ததுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பஞ்சர் ஆன லாரி மீது மோதிய டூவீலர்…… கல்லூரி மாணவர்கள் 2 பேர் மரணம்….. சென்னையில் நிகழ்ந்த சோகம்…!!

சென்னை அம்பத்தூர் அருகே பாடி சாலையில்  பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்த  பாடி சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சிக்கியுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிரசாந்த், சதீஷ் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகியோர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பின்  சனிக்கிழமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசுப் பேருந்து லாரி மீது மோதி விபத்து… ஒருவர் பலி… 12 பேர் படுகாயம்..!!

சென்னையில் அரசுப் பேருந்து கண்டெய்னர் லாரி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்து, 12 பேர் பலத்த காயமடைந்தனர்.  சென்னை 200 அடி சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று பாடியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, கண்டெய்னர் லாரியின் பின்னால் நெல்லூரிலிருந்து கோயம்பேடு வரை செல்லும் அரசுப் பேருந்து வேகமாக வந்தது. அப்போது, லாரியை முந்த அரசுப் பேருந்து முயன்றபோது நிலைதடுமாறி லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசுப் பேருந்தின் நடத்துநர் வீரமுத்து (42) என்பவர் சம்பவ […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இன்ப சுற்றுலா……. முடிவில் சோகம்……. மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி….!!

புதுக்கோட்டையில் சுற்றுலா சென்று வீடு திரும்பிய இளைஞர் வரும் வழியில் பைக் நிலை தடுமாறி மரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் விராலிமலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அன்னவாசல் சித்தன்ன மலை பகுதியில் சுற்றுலா சென்று சுற்றி பார்த்துவிட்டு பின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். வரும் வழியில் சித்தூர்பட்டி அருகே வேகமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பைக் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞர் பரிதாப பலி.!!

இருசக்கர வாகனம் மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் திருப்பத்தூரிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மண்டலவாடி அருகே இவர் வந்துகொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த ஷேர் ஆட்டோ இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின், விரைந்து […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பழுதான வாகனம் – பாதியில் நிற்கும் ரிக் இயந்திரம் ….!!

ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரத்தை ஏற்றி வந்த வாகனம் மணப்பாறை அருகே பழுதாகி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்க மணப்பாறையைத் தாண்டி வந்த ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பழுது காரணமாக பூலாங்குளத்துப்பட்டி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 30 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் குழந்தை மீட்கப்படாதது பெற்றோர்கள், பொதுமக்களிடயே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ரிக் இயந்திரத்தை கொண்டுவர உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குழந்தை விரைவில் மீட்கப்படும் என்றும் மீட்புப் பணியினர் நம்பிக்கையளித்து வருகின்றனர்.

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்னும் சற்றுநேரத்தில் வந்தடையும் ரிக் இயந்திரம்…!!

ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் இன்னும் சற்று நேரத்தில் நடுக்காட்டுப்பட்டி வந்தடையும். ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித் முதலில் 26 அடியில் சிக்கியது. அதன் பின்னர் 70 அடி ஆழத்திற்குச் சென்ற குழந்தை படிப்படியாக 85 அடியைத் தாண்டி தற்போது 100 அடிக்குச் சென்றுவிட்டது. குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளை கிணறு 600 அடி ஆழமுள்ளதாகும். நேற்று மாலை 5.40 மணிக்கு குழந்தையை மீட்க தொடங்கப்பட்ட மீட்புப் பணி 29 மணி நேரத்தைக் கடந்தும் இன்னும் மீட்கப்படவில்லை. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ஊடகத்தின் வெளிச்சம் படாத சுர்ஜித்துகள்…!!

பராமரிக்கப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி பல சுர்ஜித்துகள், தன் இன்னுயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் கதறல்கள் வெளியே கேட்காவிட்டாலும், நீதிமன்ற வாயில்களில் அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். நாடு முழுவதும் அனைவரின் கவனமும் திருச்சியை நோக்கித் திரும்பியுள்ளது. அதற்கான காரணம் மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் அழுகுரல். அந்த குழுந்தையை மீட்க தேசிய, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், ஐஐடி குழுவினர் என அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இதுபோன்று பல ஆழ்துளைக் கிணறுகளில் சிக்கி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை…..!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் இடத்தில் லேசான மழை பெய்து வருவதால் மீட்புப்பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க தொடங்கப்பட்ட இந்தப் பணி 27 மணி நேரத்தை கடந்த பின்பும் தொடர்கிறது. 85 அடியில் இருந்த குழந்தை படிப்படியாக 100 அடிக்கு சென்றுவிட்ட நிலையில், மீட்புக் குழுவினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்எல்சி, ஓஎன்ஜிசி தீயணைப்புத் துறையினர் இணைந்து 1 மீட்டர் அகலத்திற்கு 100 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘குழந்தையிடம் எந்தவித சிக்னலும் இல்லை’ – அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கித் தவித்துவரும் குழந்தையிடம் எந்தவித சமிக்ஞையும் வராதது மிகுந்த வேதனையளிப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. சம்பவ இடத்தில் அமைச்சர் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் முகாமிட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்துவரும் நிலையில், அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள சிறுவனை […]

Categories
மாநில செய்திகள்

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவதை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை…!!

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்காக மத்திய அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தையை மீட்கும் பணிகள் கடந்த 27 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது.இதுபோன்ற விபத்துகளைத் தடுக்கும் நோக்கிலும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியவும் மத்திய நீர்வள அமைச்சகம் 2009ஆம் ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவினர் ஆழ்துளைக் கிணறுகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஆழ்துளைக் கிணற்றில் இந்த ஆண்டு சிக்கிய குழந்தைகள்….!!

இந்தியாவில் இந்தாண்டு ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து மீட்கப்பட்ட குழந்தைகள் குறித்த ஒரு சிறிய தொகுப்பு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது குழந்தை எதிர்பாராத விதமாக அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழந்தது. நேற்று மாலை 5.40 மணியளவில் கிண்றறில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 27  மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. அவரை மீட்பதற்காக பல்வேறு பிரார்த்தனைகளும் நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குழந்தை மீட்புப்பணி 27 மணி நேரத்தை தாண்டியது….!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 27 மணி நேரத்தை தாண்டியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் ஒரு நாளைக் கடந்து குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை 100 அடிக்கும் கீழ் சென்று விட்ட நிலையில், கிணற்றுக்கு மூன்று மீட்டர் பக்கத்தில் குழி தோண்டும் பணி நடைபெற்றுவருகிறது. குழிதோண்ட எட்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மீட்டர் அகலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

குழந்தையை பத்திரமாக மீட்பார்கள்… எனக்கு நம்பிக்கை உள்ளது… புதுச்சேரி முதல்வர்..!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருக்கும் சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுர்ஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நேற்று மாலை 5: 40 மணிக்கு  26 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. அக்குழந்தையை மீட்கும் பணிகள் நேற்றிலிருந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே மீட்பு பணியின் போது குழந்தை சுர்ஜித் 70 அடி ஆழத்திற்கு சென்றான். இந்நிலையில் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுரங்கப்பாதை அமைத்து மீட்கும் பணி தீவிரம்! – இன்னும் ஒன்னரை மணி நேரத்தில்…

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 23 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்துவருகிறது. ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து 30 அடியிலிருந்த குழந்தை சுர்ஜித் மீட்புப் பணியின்போது 68, 70, 80 என கீழே சென்றுவிட்டதால் மீட்பதில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. குழந்தையை மீட்க தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர். 23 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தை சுர்ஜித்தை மீட்கும் போராட்டத்தில் மீட்புப் படையினர் போராடிவருகின்றனர். […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித்திற்காக தர்காவில் தொழுகையில் ஈடுபட்டுவரும் இஸ்லாமியர்கள்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை உயிருடன் மீட்க நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை மேற்கொண்டுவருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுர்ஜித் 17 மணி நேரமாக சிக்கித்தவித்து வருகிறது. இந்நிலையில் குழந்தையை மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.குழந்தை சுர்ஜித்தை உயிரோடு மீட்க உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர். பெரியாண்டவர் சன்னதியில் நடைபெற்ற தொழுகையில் குழந்தை எந்த […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித்தை ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்கும் பணி தீவிரம்…!!

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் நேற்று (அக்.25) மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. சிறுவனை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.குழந்தை 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்ட நிலையில், மீட்புப் பணி தொடர்கிறது. இதனிடையே, குழந்தை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”ஆழ்துளைக் கிணறு மூட மக்கள் ஒத்துழைக்கவேண்டும்” உதயநிதி ஸ்டாலின் ட்வீட் …!!

கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கண்டறியப்பட்டு அவை மூடப்படவேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் நேற்று முதல் 23 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித்தை மீட்க முடியல….. ”வெட்கக் கேடானது” …. திருமாவளவன் வேதனை …!!

24 அடியில் சிக்கிய குழந்தையை மீட்க தொழில்நுட்ப கருவிகள் இல்லாதது வெட்கக் கேடு என்று திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் நேற்று முதல் 21 மணி நேரத்திற்கு மேலாக […]

Categories
மாநில செய்திகள்

80 அடி ஆழத்திற்கு சென்ற சுர்ஜித்……. மீட்பு பணியில் தீவிரம் காட்டும் NDRF…..!!

குழந்தை சுர்ஜித் 80 அடி ஆழத்தில் சிக்கி கொண்டதால் குழந்ந்தையை காப்பதற்கான தீவிர முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து முதலில் 26 அடியில் சிக்கியிருந்த அவனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மீட்பு குழுவினர் 20 மணி நேரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பின் 33 பேர் கொண்ட […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரு பக்கம் மீட்பு பணி ….. மறுபக்கம் சாரல் மழை …… மீண்டுவா ? சுஜித் …!!

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி 18 மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்று வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 18 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”மனம் பதைக்கச் செய்கிறது” TTV தினகரன் வேதனை ….!!

ஆழ்துளை கிணத்துக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் ட்வீட் செய்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 18 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ”அசைவின்றி குழந்தை சுஜித்” மீட்புப்பணி தீவிரம் ….!!

மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித்தை மீட்க 17 மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 17 […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

‘குழந்தை சுஜித் மீண்டு வரவேண்டும்’ – நடிகர் விவேக் கண்ணீர்..!!

அஜாக்கிரதை, அலட்சியம் இவை – இந்தப் பொறுப்பற்ற சமூகத்தின் தொடர் பண்புகள் ஆகிவிட்டன என்று குழந்தை சுஜித் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தது பற்றி நடிகர் விவேக் ஆதங்கம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். 17 மணிநேரத்திற்கும் மேலாக இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆழ்துளைக்கிணற்றில் குழந்தை சுஜித், 70 அடிக்கும் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

துடிக்கின்றோம்…. மனம் கனக்கிறது! முக.ஸ்டாலின் வேதனை …!!

ஆழ்துளை கிணத்துக்குள் விழுந்த குழந்தை சுஜித்தை விரைந்து மீட்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்வீட் செய்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார்.இதனை தொடர்ந்து ஆழ்துளைக் கிணற்றில் இருந்து சுஜித்தை மீட்க தீயணைப்புப் படையினர் 17 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராடி […]

Categories
மாநில செய்திகள்

“சத்தமின்றி தவிக்கும் குழந்தை சுஜித்” மீட்பு பணியில் ஸ்டண்ட் கலைஞர்கள்….!!

குழந்தை சுஜித்தை மீட்க ஸ்டன்ட் கலைஞர்கள் தாமாக முன் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், மேரி தம்பதியின் குழந்தை சுஜித். இவர் நேற்று மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்தார். இதையடுத்து பல்வேறு இடங்களிலிருந்து வந்த மீட்பு குழுவினர் குழந்தையை மீட்க 15 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் முயற்சியில் ஈடுபட்டு […]

Categories

Tech |