Categories
தேசிய செய்திகள்

“கோழிக்கோடு விமான விபத்து” உயிரை காப்பாற்றிய 5 நிமிடம்….. இளைஞர் பரபரப்பு தகவல்….!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் சிக்காமல் தப்பித்தன பரபரப்பான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.  கொரோனா  பாதிப்பால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக வந்தே பாரத் என்னும் திட்டத்தின் மூலம் இந்தியர்கள் தொடர்ந்து சொந்த நாடுகளுக்கு விமானம் மூலம் திரும்புவதற்கான  ஏற்பாடுகளை மத்திய அரசு செய்தது.  அதன்படி தொடர்ந்து விமானத்தின்  மூலம் இந்தியர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி வந்தனர். அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் […]

Categories
மாநில செய்திகள்

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட கிரேன் சரிந்து விழுந்து விபத்து …!!

விசாகப்பட்டினம் கப்பல் கட்டும் தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 11 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில் 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்தது இதில் துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த 11 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த மீட்புப்படை வீரர்கள் கிரேனுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே சோகம்… பைக்கின் பின்னால் மோதிய லாரி… பரிதாபமாக இறந்த ஊழியர்..!!

ஆம்பூர் அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மின்னூர் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று காலை பைக்கின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக ஆம்பூர் கிராமிய போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் உயிரிழந்தவரின் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து… தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்த லாரி… சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியான சோகம்..!!

தொப்பூர் கணவாய் பகுதியில் ஏற்பட்ட லாரி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர் . தருமபுரி மாவட்டம் சிவாடிப் பகுதியில் இருந்து ரயில்வே இரும்பு பாலங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி நோக்கி சென்றது.. இந்த லாரி தொப்பூர் ஆஞ்சநேயர் கோயில் வளைவு பகுதியில் திரும்பும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த கோர விபத்தில் லாரியை ஓட்டிச் சென்ற திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பணி நிமித்தமாக சென்ற போது பரிதாபம்… பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து… இருவர் உயிரிழப்பு..!!

பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஈரோடு அருகே உள்ள வில்லரசம்பட்டி பிரதான சாலையில் பெருந்துறை நோக்கி சென்ற சரக்கு வாகனம் எதிரே வந்த பைக்கின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து வாகனத்தை சாலையிலேயே நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பிச்சென்றார்.. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வீரப்பன்சத்திரம் போலீசார், இருவரது உடல்களையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நேருக்கு நேர் மோதிய லாரிகள்… டிரைவர்கள் உட்பட 3 பேர் படுகாயம்..!!

லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம், வண்ணாரப்பேட்டை தச்சநல்லூர் புறவழிச்சாலையில் நள்ளிரவு நேரத்தில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் லாரி இடிபாடுகளுக்குள் மாட்டிக்கிடந்த லாரி டிரைவர்கள் உட்பட 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல் துறையினர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கர்ப்பிணியாக இருக்கும் மனைவி… லாரியின் சக்கரத்தில் சிக்கி கணவர் உயிரிழந்த சோகம்..!!

லாரியை முந்திசெல்ல முயன்றபோது இளைஞர், லாரியின் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் செல்போன் மெக்கானிக் பிரகாஷ்.. 27 வயதுடைய இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகி மனைவி கர்ப்பிணியாக உள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு இவர் கொருக்குப்பேட்டையில் இருந்து மணலி சாலை வழியாக கொடுங்கையூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது அவ்வழியாக பருப்பு லோடு ஏற்றி கொண்டு சென்றுகொண்டிருந்த லாரியை பிரகாஷ் முந்திச்செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அதிகாலை நடந்த சோகம்… திண்டிவனம் அருகே கார் கவிழ்ந்து விபத்து… குழந்தை உட்பட 6 பேர் பரிதாப பலி..!!

திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் இருந்து சென்னை நோக்கி இன்று அதிகாலை டாடா சுமோ கார் ஓன்று 3 குழந்தைகள் உள்பட 8 பேருடன் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பாதிரி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நேருக்குநேர் மோதிய பைக்… சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி..!!

பூதலூர் அருகே நேருக்கு நேர் 2 பைக்குகள் மோதிக்கொண்டதில், அதில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள புதுப்பட்டி என்ற பகுதியில் சானூரப்பட்டி மேலத் தெருவைச் சேர்ந்தவர், மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் தனசேகரன் (வயது 39). இவர் புதுப்பட்டியிலுள்ள தனியார் கம்பெனியில் எலக்ட்ரீசியனாகப் வேலைபார்த்து வந்தார். இந்த நிலையில் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போது தனசேகரனும், செங்கிப்பட்டியிலிருந்து பைக்கில் எதிரே வந்து கொண்டிருந்த திருச்சி மாவட்டம் காட்டூர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து… 2 பெண்கள் பலத்த படுகாயம்..!!

புதிய பேருந்து நிலையம் அருகே கார் மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள் படுகாயமடைந்தனர். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் மினி ஆம்புலன்ஸ் ஒன்று, எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெண்கள் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவலறிந்த பாளையங்கோட்டை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த விபத்து குறித்து போலீசார் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஏரிக்குள் பாய்ந்த பேருந்து… கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் பரிதாப பலி..!!

சீனாவில் பேருந்து ஏரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் தென்மேற்கில் உள்ள கைசவ்  மாகாணத்தின் சாலை ஒன்றில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அப்பேருந்து கவிழ்ந்து சாலையை விட்டு விலகி ஷாங்காய் ஏரிக்குள் பாய்ந்தது. சீனாவின் கல்லூரி மாணவர்கள் தங்கள் வருடாந்தர நுழைவு தேர்வு எழுதுவதற்காக அப்பேருந்தில் சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் அந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதில்  கல்லூரி மாணவர்கள் உள்பட21 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 15 பேர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்றபோது… வாகனம் மோதி 3 வயது புள்ளிமான் உயிரிழப்பு..!!

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை என்ற இடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, வடகரை, முருகன்குடி, வெண்பாவூர், பாடாலூர், சின்னாறு அன்னமங்கலம்,  உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக இருக்கின்றன. இந்த வனப்பகுதிகளில் மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் தான்  அதிகளவு வாழ்ந்து வருகின்றன. இந்தநிலையில், மான், மயில் உள்ளிட்டவை உணவு மற்றும் தண்ணீரை தேடி மக்கள் வசிக்கும்  குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைந்துவிடுவது சகஜம்.. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நாய் குறுக்கே சென்றதால் விபத்து… தந்தையும், மகளும் உயிரிழந்த சோகம்..!!

நாய் குறுக்கே சென்றதால் ஏற்பட்ட விபத்து காரணமாக பைக்கில் சென்ற தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு வயது 42 ஆகிறது.. இவர் தன்னுடைய 10 வயது மகள் சுவிட்சாவுடன் இன்று அம்பாசமுத்திரத்திலிருந்து தனது ஊருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகஸ்தியர்பட்டி மெயின் ரோட்டில் சென்றபோது நாய் ஒன்று திடீரென குறுக்கே வந்ததில், பைக்  நாயின் மேல் […]

Categories
தேசிய செய்திகள்

கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நின்ற கார் மீது ரயில் மோதி விபத்து… ஒருவர் பலி..!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் எரகுட்லா மண்டலத்தில் ஆளில்லா ரயில்வே ட்ராக்கில் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் கடப்பாவில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலைக்கு ரயில் ஒன்று சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்தது. அப்போது அந்த பகுதியில் வைகோடூரை சேர்ந்த நாகி ரெட்டி மற்றும் அவரது நண்பர் காரில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த கார் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக தண்டவாளத்தில் சிக்கி நின்றுவிட்டது. இதனிடையே வேகமாக வந்த ரயில் கார் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகா – ஆந்திரா எல்லையில் விபத்து… தமிழர்கள் 5 பேர் பரிதாப பலி…!!

கர்நாடகா – ஆந்திரா  எல்லையில் அமைந்துள்ள பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..  கர்நாடகா -ஆந்திரா எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் பெட்டாத்திப்பா சமுத்திரம் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர்.. இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மினி ஆட்டோ பைக் மீது மோதி விபத்து… மனைவி கண் முன்னே கணவன் பரிதாபமாக மரணம்..!!

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ஏற்பட்ட விபத்தில் மனைவி கண் முன்னே கணவன் பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.. கோவை மாவட்டம் சின்ன கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகூர் ராமுலு.. 52 வயதுடைய இவருக்கு உமா மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். தம்பதியர் இருவரும் பொள்ளாச்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஆனைமலை அடுத்துள்ள பால்பண்ணை சண்முகாபுரம் அருகே மினி ஆட்டோ ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றது. அப்போது பைக்கும், மினிஆட்டோவும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன. இதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது… ரயில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி..!!

செம்பட்டி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ஈஸ்வரி தம்பதியினரின் மகன் லோகநாதன்(வயது 20), திண்டுக்கல் தனியார் காலேஜில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில்  அம்பாத்துரை-கொடைரோடு இடையே உள்ள இரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, நாகர்கோவிலில் இருந்து திருச்சி மார்க்கமாகச் சென்ற இரயில் லோகநாதன் மீது மோதியது. இதில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பைக்… விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி பரிதாப பலி..!!

2 பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில், சம்பவ இடத்திலேயே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி லோகேஷ் குமார் என்பவர் பரிதாபமாக பலியானார்.. திருவள்ளூர் மாவட்டம் சென்றன்பாளையம் பஜனை கோயில் தெருவில் வசித்து வந்தவர் லோகேஷ் குமார். 24 வயதுடைய இவர், நேற்றிரவு (ஜூன் 13) சீத்தஞ்சேரியில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அப்போது, எதிரே வந்த பைக்கும்  இவரது வாகனமும் நேருக்குநேர் வேகமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே லோகேஷ் குமார் பரிதாபமாக பலியானார். மேலும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

நேருக்குநேர் மோதிய பைக்… தொழிலாளி பரிதாப பலி… 2 பேருக்கு சிகிச்சை..!!

திருமானூர் அருகே விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது மகன் பெரியசாமி.. 28 வயதான இவர் தப்பாட்ட கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று தன்னுடைய பைக்கில் அன்னிமங்கலத்திலிருந்து திருமானூர் நோக்கி சென்றார். அப்போது திருமானூர் அருகே சென்றபோது, எதிர் திசையில் அதே அன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் கிருபாகரன்(வயது 27), தங்கவேல்(வயது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற போது ஏற்பட்ட சோகம்… இளைஞர் பரிதாப மரணம்..!!

ராசிபுரம் அருகே விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம் to நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஆயா கோவில் பிரிவு ரோடு அருகே நேற்று காலை இளைஞர் ஒருவர் சாலையை கடந்து செல்ல முயன்றபோது சேலத்திலருந்து நாமக்கல் நோக்கி வேகமாக சென்ற கார் திடீரென அவர் மீது மோதியது. இந்த விபத்தில் இடது கை, இடது கால் மற்றும் தலையில் பலத்த அடிபட்ட […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் அருகே சோகம்… அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி..!!

வேலூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பைக் விபத்தில் பெயிண்ட் தொழிலாளர்கள் 2 பேர் பலியாகியுள்ளனர். வேலூர் மாவட்டம் வசூர் பகுதியில் அமைந்துள்ள வேலூர் to சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த இருவர் விபத்து ஏற்பட்டு பலியாகியுள்ளதாக சத்துவாச்சாரி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.. அந்தத் ததவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடல்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் வேலூர் மக்கான் பகுதியைச் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற போது நிகழ்ந்த சோகம்… விபத்தில் சிக்கி 2 பேர் மரணம்..!!

கோலியனூர் அருகே நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியில் நள்ளிரவில் இருசக்கர வானத்தில் வந்த இருவர் விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக வளவனூர் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார், உடல்களை அங்கிருந்து மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

திடீரென! டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி… சாலையின் மையத்தடுப்பில் மோதி விபத்து!!

தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்திலிருந்து ஈரோட்டிற்கு சிமெண்டு மூட்டைகளை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஓன்று புறப்பட்டது. இந்த லாரியை தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த 40 வயதுடைய லாரி டிரைவர் முருகன் என்பவர் ஓட்டி வந்தார்.. நேற்று காலை தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தசமயம், திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தடுப்பின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

லாரி மோதி பெண் உயிரிழப்பு… போலீசார் விசாரணை..!!

சிங்காரப்பேட்டை அருகே லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகேயுள்ள மிட்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த தனபாக்கியம் என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் மிட்டப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற லாரி அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சைக்கிள் மீது பால் வேன் மோதி விபத்து… தொழிலாளி உயிரிழப்பு..!!

நூற்பாலையில் வேலைபார்த்து வரும் தொழிலாளி விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள என்.பி.கே. புதுப்பட்டியை சேர்ந்தவர் கந்தசாமி இவருக்கு வயது41.. இவர் மதுரை ரோட்டிலுள்ள தனியார் நூற்பாலையில் வேலைபார்த்து வந்தார். நேற்றிரவு பணி முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். மம்சாபுரம் விலக்கு அருகே  சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக பால் ஏற்றி வந்த வேன் திடீரென அவர்மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கந்தசாமி அதே இடத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற பைக்… பின்னால் அமர்ந்து சென்ற நபர் கீழே விழுந்து மரணம்… வாகன ஓட்டி கைது..!!

பைக்கில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் அமர்ந்து சென்ற நபர் பலியானதால், வாகனம் ஓட்டிச் சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி..  இவரது வயது 34.. இவரது நண்பரின் பெயரும் முரளி.. இவரது வயது 48. இவர்கள் இருவருமே கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் இன்று காலை மதுரவாயல் பகுதியில் வேலைக்காக பைக்கில் சென்றுள்ளனர். அப்போது திருமங்கலம் மேம்பாலத்தின் மீது வேகமாக சென்று கொண்டிருந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வேன் மீது பைக் மோதி விபத்து : 5 வயது சிறுவன் பரிதாப பலி… மூவருக்கு தீவிர சிகிச்சை..!!

பல்லடம் அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன்பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையத்தை அடுத்து இருக்கும் கரடிவாவி என்ற இடத்தில் சாலையோரத்தில் சரக்கு வேன் ஒன்று நின்றுகொண்டிருந்தது.. அப்போது அவ்வழியே வந்த பைக் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அந்த சரக்கு வேனின் பின்னால் அதி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 5 வயதுடைய சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

போதையில் காரை வேகமாக ஓட்டியதால் விபத்து… தொழிலதிபர் உடல்நசுங்கி பலி..!!

மதுகுடித்து விட்டு போதையில்  காரை வேகமாக ஓட்டிச்சென்று தடுப்புகளின் மீது மோதியதில் தொழிலதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே  உடல் நசுங்கி பலியானார். வேலூர் மாவட்டம் செதுவாலை இந்திரா நகர் பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் ராஜி.. 27 வயதுடைய இவர் தன்னுடைய கார் மூலம் வேலூர் வந்துவிட்டு பின் மீண்டும் அதே காரில் மது குடித்து விட்டு செதுவாலை நோக்கி தனது வீட்டிற்கு சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது கொணவட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

“விஷவாயு விபத்து” கும்பல், கும்பலாக….. 2000 பேர் மயக்கம்….. 8 பேர் மரணம்….!!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள LG POLYMER தொழிற்சாலையில் விஷவாயு கசிய தொடங்கியது. அதிகாலை முதலே கசியத் தொடங்கிய இந்த விஷவாயு வெங்கடாபுரத்தை சுற்றியுள்ள கிராமம் முழுவதும் பரவியதால், கண் எரிச்சல், வாந்தி, அறிகுறி உள்ளிட்டவற்றை உணர்ந்த கிராம மக்கள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி கிராமத்தை விட்டு ஓட தொடங்கியுள்ளனர். சுமார் 5 கிராமங்களில் இந்த விஷ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பக்கத்து வீட்டு சுவர்…. இடிந்து தரைமட்டம்….. தந்தை…. 2 மகள்கள் பலி….!!

சென்னை தாம்பரத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் தாம்பரம் பகுதியை அடுத்த சீனிவாசன் நகரில் உள்ள முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் திருமணமாகி தனது கணவருடன் ஆந்திராவில் வசித்து வந்தார். அவரது இளைய மகள் சுமித்ரா மாற்றுத்திறனாளி. இவர் தந்தைக்கு உதவியாக கூலி வேலை செய்தும், வீட்டுப் பணிகளை மேற்கொண்டும் வந்துள்ளார். இந்நிலையில் கலா […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய டிரைவர்… தக்காளி பழங்களை எடுத்து செல்வதில் குறியாக இருந்த மக்கள்… காற்றில் பறந்த மனிதநேயம்!

பண்ணாரி அருகே ஏற்பட்ட வாகன விபத்து ஏற்பட்டதில், உயிருக்கு போராடிய டிரைவரை மீட்காமல், சாலையோரம் சிதறிக்கிடந்த தக்காளிப் பழங்களை ஆர்வத்துடன் பொதுமக்கள் அள்ளிச்சென்றதால் மனித நேயம் காற்றில் பறந்துவிட்டது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து தக்காளிப் பழங்களை ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் நோக்கி, சரக்கு வாகனம் ஓன்று சென்றுள்ளது. அப்போது சரக்கு வாகனம் ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சென்று கொண்டிருந்த சமயம் நிலைதடுமாறி, சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தவிபத்தில் பலத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஊரடங்கை மீறி… ஆண் நண்பருடன் காரில் பயணம்… விபத்தில் சிக்கிய கன்னட நடிகை… சோகத்தில் ரசிகர்கள்!

ஊரடங்கு உத்தரவை மீறி தனது ஆண் நண்பருடன் காரை ஓட்டிச் சென்று கன்னட நடிகை ஷர்மிளா மந்த்ரே (Sharmila Mandre) விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னடத்தில் கடந்த 2007-ஆம் ஆண்டு  வெளியான ‘சஜ்னி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷர்மிளா மந்த்ரே. அதைத்தொடர்ந்து இவர் 20-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்தார். இவர் தமிழிலும் ‘மிரட்டல்’ படம் மூலம் எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல வரவேற்பைப் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் கார் மோதி சிலிண்டர் லாரி தீப்பிடித்து விபத்து!

சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வேலூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சிலிண்டர் லாரியில் மோதியுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதியதில் சிலிண்டர் லாரி தீப்பிடித்து எரிந்தது. கார் மோதிய வேகத்தில் சிலிண்டர் லாரி எரிவதால் நெடுஞ்சாலை புகைமண்டலாக காணப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் கார் ஓட்டுனரை பத்திரமாக மீட்டு அப்புறப்படுத்தியுள்ளனர். கார் லாரியின் அடியில் சிக்கி தீப்பற்றி எரித்தது. இதனையடுத்து அருகில் […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

நான் அப்பா ஆகிட்டேன்…. மகளை பாரக்க சென்ற தொழிலாளி… விபத்தில் சிக்கி மரணம்….!!

கிருஷ்ணகிரி அருகே தனது குழந்தையை பார்க்க சென்ற தொழிலாளி விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர்பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதேபகுதியில் பேக்கரி கடை ஒன்றில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.  6 மாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவியை தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார். இந்நிலையில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை காண்பதற்காக தனது தங்கை பிரியங்காவுடன் இருசக்கர வாகனத்தில் தர்மபுரி நோக்கி […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பாலம் இடிந்து விபத்து… குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாப பலி!

அமெரிக்காவில்  பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு பல மைல் வேகத்தில் புயல் காற்று வீசியதோடு மட்டுமில்லாமல் பேய் மழையும் கொட்டித்தீர்த்தது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் அங்குள்ள பிராங்கிளின் (Franklin) நகரில் நேற்று முன்தினம் பாலம் ஒன்று திடீரென […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவிநாசி அருகே சோகம்… லாரி மீது பயங்கரமாக மோதிய கார்… கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கார் ஓன்று சிமெண்ட் லாரி மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். தமிழகம் முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக பள்ளி மற்றும் கல்லுரிகளுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  சேலத்தில் உள்ள பாராமெடிக்கல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் விடுமுறையையொட்டி உதகைக்கு காரில் சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அவிநாசி அடுத்த பழங்கரை என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“இந்தியன்-2” போலீஸ் என்ன டார்ச்சர் பண்ணுறாங்க….. நடிகர் கமல் பரபரப்பு குற்றசாட்டு….!!

விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அழைத்து காவல்துறையினர் தன்னை டார்ச்சர் செய்வதாக நடிகர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியன்2 படப்பிடிப்பின் போது கிறேன் கீழே விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து டைரக்டர் ஷங்கர், நடிகர் கமலஹாசன் மற்றும் புரடக்ஷன் நிறுவன ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, நடிகர் கமல்ஹாசனிடம் இரண்டு முறை விசாரணை மேற்கொண்டு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மீனுக்கு விரித்த வலையில்…… சிக்கிய மீனவர்…… மூச்சு திணறி நீரில் மூழ்கி பலி….. செங்கல்பட்டு அருகே சோகம்….!!

செங்கல்பட்டு அருகே விரித்த வலையில் மீனவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் மெய்யூர் குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன். இவர் மீனவர் தொழிலாளி ஆவார். இவர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார். சுமார்  நான்கு கிலோமீட்டர் தொலைவில் சென்று மீன் வலையை விரித்த போது கால் தவறி கடலில் விழுந்துள்ளார். விழுந்தவுடன் வலையானது கை,கால்களில் சிக்கியதால் நீச்சலடிக்க முடியாமல் திணறிய அவர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிவேகம்….. சூறைக்காற்று புழுதி….. விபத்தில் சிக்கி வாலிபர் மரணம்…. காஞ்சி அருகே சோகம்…..!!

காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்கி. இவர் கடந்த ஆண்டுதான் கல்லூரி படிப்பை முடித்தார். இந்நிலையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் இவர் நேற்று தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாலஜாபுரத்திலிருந்து  வண்டலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது படப்பை அருகே நிலைதடுமாறிய இவர் காற்று வேகமாக வீசியதால் கண்ணில் தூசி விழுந்து வாகனம் நிலை தடுமாறி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” பைக் மீது மோதிய கார்…… 2 கல்லூரி மாணவர்கள் பலி…..!!

கடலூர் அருகே விபத்தில் சிக்கிய  2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைக் அடுத்த இருப்புகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய வின்சன்ட். இவர் சேப்பிளநத்தத்தில் உள்ள விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவரும் இவரது நண்பரான அமல்ராஜ் என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது புதுப்பட்டி பகுதி அருகே சென்ற சமயத்தில் இவர்கள் மோட்டார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” காய்கறி மூட்டை சரிந்து தொழிலாளி மரணம்….. 3 பேர் படுகாயம்….!!

திண்டுக்கல் அருகே காய்கறி மூட்டை சரிந்து தொழிலாளி மரணம் அடைய மூன்று பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி காய்கறி சந்தையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சரக்கு வேன் ஒன்று காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை ஒட்டன்சத்திரத்தை  சேர்ந்த கார்த்திகை வேல் என்பவர் ஓட்ட வேனின் பின்பகுதியில் காய்கறி மூட்டைகளோடு மூட்டை தூக்கும் தொழிலாளிகளான பெருமாள், பூபதி, சண்முகவேல் உள்ளிட்டோர் அமர்ந்து வந்தனர். அப்போது பழனி அரசு குடியிருப்பு அலுவலகம் அருகே சென்று […]

Categories
தேசிய செய்திகள்

மரத்தின் மீது மோதி கவிழ்ந்த வேன்… 5 பேர் பலி… 24 பேர் படுகாயம்!

அசாம் மாநிலத்தில் புது மணப்பெண்ணை புகுந்த வீட்டில் விட்டு விட்டு திரும்பும் போது வேன் விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உலகம் முழுவதும் ஏதாவது ஒரு பகுதிகளில் சாலை விபத்து தினமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் பலரும் உயிரிழக்கத்தான் செய்கின்றனர். சாலை விபத்துகளை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் இந்த சோக சம்பவம் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், அசாம் மாநிலம் உடல்குரி மாவட்டம் (Udalguri) நசான்சலி பகுதியில், திருமண கோஷ்டியினருடன் […]

Categories
தேசிய செய்திகள்

கோர விபத்து… நேருக்கு நேர் மோதிய ஜீப் – டிரக்… புது தம்பதியர் உட்பட 11 பேர் உடல் நசுங்கி பலி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் டிரக் மற்றும் ஜீப் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர் ராஜஸ்தான் மாநிலம், பார்மர் (Barmer) மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சமீபத்தில் திருமணமான ஒரு தம்பதியருடன் இன்று ஒரு காரில் ஜோத்பூர் நகரின் அருகே இருக்கும்  பாபா ராம்டியோ ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது பலோத்ரா-பலோடி நெடுஞ்சாலையில் ஷேகார் என்ற பகுதியில் இருக்கும் சோயின்ட்டாரா கிராமம் வழியாக  வந்தபோது எதிராக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

JUST NOW : வடசென்னை அனல் மின் நிலையத்தில் தீவிபத்து ….!!

வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் இருக்கக்கூடிய மூன்று பிரிவுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நிலக்கரி கொண்டு வரக்கூடிய கன்வேயர் பெல்ட்டில் மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அனல் மின் நிலையத்தில் இருந்த 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு வருகின்றது. தீ அதிகமாக பரவுவதால் மேலும் ஒரு வாகனத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தீயை கட்டுக்குள் […]

Categories
உலக செய்திகள்

பிரேசில்: “கோர விபத்து” 18 பேர் மரணம்…… 30 பேர் மாயம்…… மீட்பு பணி தீவிரம்…..!!

பிரேசிலில் உள்ள அமேசான் துணை நதியான ஜாரி  நதியில் இரண்டடுக்கு கப்பலில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். அமேசானின் துணை நதியான ஜாரி நதியில் இரண்டடுக்கு படகு ஒன்று எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த படகில் மொத்தம் 94 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அந்தவகையில், விபத்தில் சிக்கியவர்களில் 46 பேர் மீட்கப்பட, 18 பேர் பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் 30 பேரை பிரேசில் அரசு வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்த நிலையில், […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வேகத்தடை….. குலுங்கிய வண்டி…… வயிற்றை கிழித்த கண்ணாடி….. இளைஞர் மரணம்….!!

செங்கல்பட்டு அருகே வேகத்தடையில் வண்டி குலுங்கியதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் சர்தார். இவர் பழைய கண்ணாடிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தனது டெம்போவில் டிரைவருடன் சென்று அப்பகுதியை சுற்றியுள்ள ஏரியாக்களில் பழைய கண்ணாடிகளை சேகரித்து வந்துள்ளார். பின் டெம்போ நிரம்பியதும் இருவரும் புலியூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும்போது கண்ணாடிகளை பத்திரமாக பார்த்துக்கொள்வதற்காக சர்தார் அமர்ந்துவிட்டார். டெம்போவின்  […]

Categories
சினிமா சென்னை தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

படப்பிடிப்பு தளங்களில் தொடரும் அசம்பாவிதம்…. தற்போது தீ விபத்து

சென்னையில் மற்றொரு படப்பிடிப்பு தளத்திலும் தீ விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அண்மையில் இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்துநடந்து உயிர் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் தற்போது சென்னையில் இருக்கும் சாலிகிராமத்தில் சினிமா படப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடக்காத நிலையிலும் திடீரென தீ விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தளத்தில் முதல் தளம் முற்றிலுமாக எரிந்து உள்ளது. 2 தீயணைப்பு வீரர்கள் மெட்ரோ லாரி மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“கார்-பேருந்து” நேருக்கு நேர் மோதல்….. முன்னாள் SI மரணம்…. நெல்லை அருகே சோகம்…!!

நெல்லை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை  சேர்ந்தவர் முருகன். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவர் நேற்று மதியம் தனது காரில் திருச்செந்தூர் வரை பயணித்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில், காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கி சிதர சம்பவ இடத்திலேயே ரத்த […]

Categories
சற்றுமுன் சினிமா மாநில செய்திகள்

BREAKING : இந்தியன் – 2 படப்பிடிப்பு விபத்து – 6 பேரிடம் விசாரணை …!!

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மது மற்றும் கலை உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர்  பலியாகினர்.மேலும் 10 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பாக  இணை இயக்குனர் குமார் , நசரத்பேட்டை காவல்நிலையத்தில் கொடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

JUST NOW : இந்தியன் -2 விபத்து : லைகாவுக்கு கமல் கடிதம் …!!

கதாநாயகன் முதல் கடைநிலை ஊழியர் வரை பாதுகாப்பை உறுதி செய்யுமாறு லைக்கா நிறுவனத்திற்கு கமலஹாசன் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 19ம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் படப்பிடிப்பு தற்போது வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய்யும் , நடிகர் கமல்ஹாசன் 1 கோடி ரூபாய் நிதியும்  அளிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் லைக்கா […]

Categories

Tech |