மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் பகுதியில் சங்கர் புனிதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹர்ஷினி என்ற மகளும், கௌரீஸ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் ஹர்ஷினி சேலம் மாவட்டத்திலுள்ள புனிதாவின் தங்கை சித்ரா வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் ஹர்ஷினியை அழைத்து வருவதற்காக சங்கர் தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சித்ரா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் வெள்ளியம்பாளையம் பிரிவு அருகே […]
