சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் பகுதியில் விஷ்ணுவரதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விஷ்ணுவரதன் தனது நண்பரான சவுத்ரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாமல்லபுரம் நகரை சுற்றி பார்ப்பதற்காக சென்றுள்ளார். இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வடநெம்மேலி பகுதியில் வைத்து சாலையின் குறுக்கே வந்த பசுமாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதால் இருவரும் […]
