மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள போரூர் ராமசாமி நகர் 1-வது தெருவில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செண்டை மேளம் வாசிக்கும் கலைஞர் ஆவார். இந்நிலையில் சங்கர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருவொற்றியூரில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் காசிமேடு சூரிய நாராயண சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த […]
