ஏசியில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் அடுத்த கவுல் பஜார் யசோதரை என்னும் நகரை சேர்ந்தவர் சங்கீதா (25). இவர் நேற்று தனது வீட்டின் வாசலில் அமர்ந்து பூக்கட்டி கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவரது 2 வயது குழந்தை பிரிஜிதா படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டினுள் தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த சங்கீதா உள்ளே சென்று குழந்தையை தூக்க முயற்சி செய்தபோது தீ மளமளவென […]
