சிம்பு, வெங்கட் பிரபு கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாநாடு’ திரைப்படத்தில் புதிதாக நான்கு முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப்படத்தை சுரேஸ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரயதர்ஷன் நடிக்கிறார். மூத்த இயக்குநர்களும் நடிகர்களுமான பாரதி ராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், கருணாகரன், பிரேம்ஜி அமரன் […]
