இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ராவை தன்னால் எளிதாக எதிர்கொள்ள முடியும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்துவிதமான ஃபார்மெட்டுகளிலும் கலக்கிவருகிறார். எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தாலும் இவரது துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வது என்பது சற்று கடினமாகவே உள்ளது. ஒருநாள் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பும்ரா தற்போது காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். இவர் சமீபத்தில் தனது பயிற்சியை தொடங்கினார். […]
