இறப்பதற்குள் ஒரு முறையாவது பெற்ற பிள்ளைகளை பார்க்க வேண்டும் என பிள்ளைகளால் கைவிடப்பட்ட தம்பதி, ஊர் ஊராக தங்களது மகளையும் மகனையும் தேடிவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு பகுதியில் புறம்போக்கு குடிசையமைத்து வாழ்ந்துவந்தவர் கணேசன்(70). இவரின் சிறுவயதில் ரயில் தண்டவாளங்கள் போடுவதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் வீட்டை இழந்தார்.பின்னர் ஊர் ஊராகச் சென்று சாலையோரங்களில் தங்கி குடை தைக்கும் தொழில்செய்து குடும்பத்தைக் காப்பாற்றிவந்தார். இவருக்கு சரசு என்ற மனைவியும் லஷ்மி என்ற மகளும் சத்தியராஜ் என்ற மகனும் உள்ளனர். […]
