அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள யூனியனில் சேர்ந்த கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அகரம், மணலூர், கொந்தகை ஆகிய பகுதிகளில் குழிகள் தோண்டி பணிகள் நடைபெற்றுள்ளது. அதன்பின் கீழடியில் மண்பாண்ட ஓடுகள், தந்தத்தால் ஆன தாயக்கட்டை, சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள் மற்றும் சேதமுற்ற சிறிய-பெரிய பானைகள் தங்க ஆபரணங்கள் உள்பட பொருட்கள் கிடைத்துள்ளது. இதனைப் போல் கொந்தகையில் 20-க்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள் 10-க்கும் […]
