சூறாவளி காற்றினால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டியில் லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில் மழையுடன் வீசிய சூறாவளி காற்றில் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் இருக்கும் சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்து விட்டது. இதேபோன்று கணக்கம்பாளையம் பகுதியில் இருக்கும் மற்றொரு மரமும் சூறாவளி காற்றால் விழுந்துவிட்டது. இதுகுறித்து உடனடியாக நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து […]
