தான் கர்ப்பமானதே தெரியாத பெண்ணுக்கு பாத்ரூமில் வைத்து ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ் பகுதியில் உள்ள மெலிசா என்ற பெண் தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மெலிசா கடந்த மார்ச் 8ஆம் தேதி திடீரென வயிற்று வலியால் துடித்துள்ளார். பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் மெலிசா கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் வயிற்று வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது வயிற்றின் உள்ளே இருந்து ஏதோ ஒன்று வெளியேறுவது போல் உணர்ந்துள்ளார். […]
