கிணற்றுக்கு குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பொதும்பு கிராமத்தில் அல்லிமுத்து என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் தினேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் குளிப்பதற்காக ஊருக்குள் உள்ள ஒரு கிணற்றுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். இதனை கண்ட தினேஷின் நண்பர்கள் அக்கம் […]
