வாலிபர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தியூர் அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் அருகே எண்ணமங்கலம் பகுதியை சார்ந்த தேவராஜ் மகன் பிரகாஷ். இவர் கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக அவர் தனது சொந்த ஊரான அந்தியூர் வந்துள்ளார். இதனை அடுத்து நேற்று முன்தினம் பிரகாஷ் சிறுவர்களுடன் சேர்ந்து அந்த பகுதியில் இருந்த 60 அடி ஆழ கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் […]
