தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அய்வத்தான்பட்டி கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சின்னம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் பழனியப்பனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் பல இடங்களில் சிகிச்சை பெற்றும் எந்தவித பலனும் இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் தனது வீட்டின் பின்புறத்தில் உள்ள […]
