சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள அ.பாறைப்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டி.கல்லுப்பட்டி பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை அவர் தனது பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல […]
