ஆடு திருடிய குற்றத்திற்காக வாலிபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள தங்களாச்சேரி கிராமத்தில் போஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை போஸ் திரும்பி வந்து பார்த்தபோது கொட்டகையில் இருந்த சினை ஆடுகள் காணாமல் போனதை கண்டு அடைந்துள்ளார். இது குறித்து போஸ் நாகையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை […]
