காவல் நிலையத்திற்கு வெளியே பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரின் அருகில் காவல் நிலையத்தின் வெளியே ஒரு பெண் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். இந்த பெண் போலீசாருக்கு வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணை கத்தியால் குத்திய நபர் துனிசிய நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. […]
