பெண் மருத்துவர் வீட்டின் குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் காந்திநகர் பகுதியில் நிலேஷ் சவுகான்-மனிஷா என்ற தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவார்கள். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நிலேஷ் காலையில் தூங்கி எழுந்தபோது மனைவி அருகில் இல்லாததால் பதறியுள்ளார். பின்னர் அவர் வீடு முழுவதும் மனைவியை தேடியபோது குளியலறையில் மனிஷா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டதும் நிலேஷ் அதிர்ச்சி […]
