நீதிமன்றத்தில் உரிய நேரத்தில் ஆஜராகாத பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மணி காம்பவுண்டு பகுதியில் சாதிக் பாஷா சுபேதா பீவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுபேதா பீவி ஒரு வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராக வேண்டி இருந்தது. ஆனால் அவர் உரிய நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]
