வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தங்காசேரி பகுதியில் அரசால் வழங்கப்பட்ட காலணி தொகுப்பு வீட்டில் பாண்டியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று இரவு காற்றுக்காக தனது வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளார். அதன்பின் அதிகாலையில் லேசாக மழை தூரியதால் அவர் வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொகுப்பு வீடு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் பாண்டியம்மாள் படுகாயம் அடைந்து […]
