விவசாயி தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை கொரோனா நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகின்றது. மேலும் நாடு முழுவதும் பல நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளும் ஆக்சிஜனும் கிடைக்காமல் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் அல்லாடும் நிலையை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் நீமுச் மாவட்டத்தில் விவசாயி குர்ஜால் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மகளின் திருமணத்திற்காக ரூபாய் 2 […]
