எலிகளைப் பிடிப்பதற்காக விவசாயி வைத்த கூண்டில் அரியவகை விலங்கான மரநாய் சிக்கியுள்ளது. நாகை மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளான பிரதாபராமபுரம், வேளாங்கண்ணி, காமேஸ்வரம், பொதிகை நல்லூர், வடக்கு பொய்கைநல்லூர், புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு போன்ற பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகள் போன்றவற்றை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் எலிகள் உள்ளிட்டவைகள் விளை நிலங்களில் புகுந்து காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றது. அவற்றை பிடிப்பதற்காக விவசாயிகள் தங்கள் நிலங்களில் கூண்டுகளை வைத்துள்ளனர். அவ்வாறு ஒரு விவசாயி தனது விளைநிலத்தில் வைத்திருந்த ஒரு கூண்டில் அரியவகை விலங்கான மரநாய் […]
